முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

காலை 8 மணி.. பொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடக்கம்!! உடனே முந்துங்கள்.. 

Ticket booking for homebound train passengers for Pongal festival starts today at 8 am. Booking starts today on IRCTC website.
07:28 AM Sep 12, 2024 IST | Mari Thangam
Advertisement

தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக , கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே தொடங்குவது வழக்கம். அதன்படி, 2025ம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி போகி பண்டிகையும், 14-ம் தேதி பொங்கல், 15-ம் தேதி மாட்டுப் பொங்கல், 16-ம்தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12-ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

அதன்படி, ஜனவரி 10-ம் தேதி பயணம் செய்ய விரும்புவோர், செப்டம்பர் 12-ம் தேதியும், ஜனவரி 11-ல் பயணம் செய்ய விரும்புவோர் செப்.13-ம் தேதியிலும், ஜனவரி 12-ல் பயணம் செய்ய செப். 14-ம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம். இதேபோல், ஜனவரி 13-ம் தேதி போகி பண்டிகைக்கு பயணம் செய்ய செப்.15-ம் தேதியும் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்தது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ரயில் பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் இன்று புக்கிங் தொடங்குகிறது. ரயில்வே டிக்கெட் புக்கிங் இணையதளமான ஐஆர்சிடிசி மற்றும் ரயில்வேயில் உள்ள டிக்கெட் கவுன்டர்களில் முன்பதிவு செய்யலாம். பொதுவாக பண்டிகை நாட்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.. அதேபோல, டிக்கெட் முன்பதிவும் தொடங்கிய சில நிமிடங்களில் காலியாகிவிடும். தீபாவளி பண்டிகை, ஆயுத பூஜை பண்டிகை போன்ற நாட்களில் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் விற்று வெயிட்டிங் லிஸ்ட் ஆக போனது.

Read more ; மக்களே… 15-ம் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம்..! மாத்திரைகள் அனைத்தும் இலவசம்…

Tags :
irctcIRCTC websitepongal festivalticket booking
Advertisement
Next Article