முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திக்… திக்!… பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு!… கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை!… பீதியில் மக்கள்!

06:36 AM May 16, 2024 IST | Kokila
Advertisement

Slovakia PM: ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவின் பிரதமராக இருப்பவர் ராபர்ட் பிகோ. இங்குள்ள ஹண்ட்லோவா நகரில் நேற்று நடந்த அரசு நிகழ்ச்சியில் இவர் பங்கேற்றார். பின், ஆதரவாளர்களை சந்திப்பதற்காக கலாசார இல்லம் சென்றுள்ளார். அப்போது, மர்மநபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் பிரதமர் ராபர்ட் பிகோவை நோக்கி 5 முறை சுட்டார். இந்த சம்பவத்தில் பிரதமரின் வயிற்றில் குண்டுகள் துளைத்தன. இதையடுத்து, பாதுகாவலர்கள் பிரதமரை மீட்டு காரில் ஏற்றி சென்றனர். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட பிரதமருக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். துப்பாக்கியால் சுட்டு தப்ப முயன்ற மர்மநபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 71 வயதான ஜுராஜ் சின்டுலா என்பது தெரியவந்தது. இந்த நபர், ஒரு தனியார் பாதுகாப்பு முன்னாள் ஊழியர் என்பதும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் என்பதும் அடையாளம் காணப்பட்டார். பிரதமர் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அதிபர் சுசானா குபுடோவா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Readmore: மாதம் ரூ.400 கல்வி உதவித் தொகையுடன் இசை பயில விண்ணப்பிக்கலாம்…!

Advertisement
Next Article