For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Rain: இன்று மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை...!

06:51 AM Apr 20, 2024 IST | Vignesh
rain  இன்று மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் இடி  மின்னலுடன் கூடிய மழை
Advertisement

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

Advertisement

சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 23-ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும்.

இன்று அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறையக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement