அச்சுறுத்தும் நோரோ வைரஸ்!… 1500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!... அறிகுறிகள்! தடுக்கும் வழி இதோ!
இங்கிலாந்தில் நோரோ வைரஸால் 1500க்கும் மேற்பட்டோ பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக நோய் கட்டுப்பாட்டு மையங்களின் (CDC) கூற்றுப்படி, நோரோவைரஸ் வயிறு அல்லது குடல் அழற்சியை ஏற்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் பதிவான வழக்குகளை விட இந்த எண்ணிக்கை 60 சதவீதம் அதிகம். ஸ்காட்லாந்து,ராயல் காலேஜ் ஆஃப் எமர்ஜென்சி மெடிசின், இந்த வைரஸ் நோய் மற்றும் இல்லாத அபாயத்தை அதிகரிக்கிறது என்று தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக நோரோ வைரஸ் மற்றும் பிற குளிர்கால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால் சுகாதார நிபுணர்கள் கவலையடைந்துள்ளனர்.
நோரோ வைரஸ் என்றால் என்ன, எப்படி பரவுகிறது, அறிகுறிகள் மற்றும் காரணங்கள் என்ன என்பதை ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். நோரோ வைரஸ் என்பது கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் தொற்றுநோய். தயாரிப்பின் போது மாசுபட்ட உணவு அல்லது நீர் முலம் அல்லது அசுத்தமான மேற்பரப்புகள் மூலம் இவை பரவுகின்றன. பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பு கொள்ளும் போது இவை பரவலாம்.
நோரோ வைரஸ் தொற்றுக்கு பிறகு 12 முதல் 48 மணி நேரத்துக்கு பிறகு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி ஆகியவை தொடங்குகிறது. நோரோ வைரஸ் 1 முதல் 3 நாட்கள் வரை நீடிக்கும். பெரும்பாலான மக்கள் சிகிச்சையின்றி முழுமையாக குணமடைகின்றனர். எனினும் சிறு குழந்தைகள் பெரியவர்கள் மற்றும் பிற மருத்துவ நிலைமைகள் உள்ளவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு கடுமையாக இருக்கும். இதனால் நீரிழப்பும் மருத்துவ கவனிப்பும் தேவை.
நோரோ வைரஸ் அறிகுறிகள்: குமட்டல், வாந்தி, வயிற்று வலி அல்லது பிடிப்புகள், வயிற்றுப்போக்கு (நீர் அல்லது தளர்வான முறை), உடல் வலி, அதிக வெப்பநிலை, தசை வலி போன்றவை இருக்கலாம். அறிகுறிகள் மோசமாகும் போது நீரிழப்பு ஏற்படலாம். நோரோ வைரஸ் மலம் மற்றும் வாந்தி மூலம் பரவுகிறது. இது அசுத்தமான உணவு , நீர் மற்றும் மேற்பரப்புகள் மூலம் பரவுகிறது. இது வயிற்றுப்போக்கை தூண்டும் ரோட்டா வைரஸ் போன்றது.
அசுத்தமான உணவை உண்பது, அசுத்தமான தண்ணீரை குடிப்பது. கை அசுத்தமான மேற்பரப்பு அல்லது அதன் பொருள்களுடன் தொடர்பு கொண்ட பிறகு கையை வாயில் தொடுதல் போன்றவற்றின் மூலம் பரவுகிறது. மேலும் நோரோ வைரஸ் தொற்று உள்ளவர்களுடன் நெருங்கி பழகும் போது உண்டாகிறது. இதை அழிப்பது கடினம். இது வெப்பமான மற்றும் குளிர்ந்த வெப்பநிலை மற்றும் கிருமி நாசினிகளையும் தாங்கும் தன்மை கொண்டது.
தொற்று உள்ள ஒருவரால் உணவு கையாளப்பட்ட இடத்தில் சாப்பிடுவது குழந்தைகள் பள்ளி, நர்சரி பள்ளி அல்லது குழந்தை பராமரிப்பு மையத்தில் கலந்து கொள்வது, முதியோர் இல்லங்கள். நெருக்கமான இடங்களில் வசிப்பவர்கள், ஹோட்டல், உணவகங்கள், ரிசார்ட், கப்பல் போன்ற நெருக்கமான இடங்களில் நோரோ வைரஸ் தொற்று உள்ள ஒருவருடன் தொடர்பு கொள்ளும் போது பெரும்பாலான மக்களுக்கு பரவலாம். இது சில நாட்களுக்குள் மறைந்துவிடும் உயிருக்கு ஆபத்தானது அல்ல, ஆனால் பலவீனமானவர்கள், குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகளுக்கு தொற்று கடுமையாக இருக்கலாம். நீரிழப்பு திவீரமானால் மரணத்தையும் உண்டு செய்யலாம்.
கைகளை கழுவுங்கள் கைகளை குறைந்தது 20 விநாடிகள் சோப்பு போட்டு ஓடும் நீரில் கழுவுங்கள். குறிப்பாக கழிப்பறையை பயன்படுத்திய பிறகு, டயப்பரை மாற்றிய பிறகு. உணவு தயாரிப்பதற்கு முன்பு, சாப்பிடுவதற்கு முன்பு. ஆல்கஹால் அடிப்படையிலான சுத்திகரிப்புகள் பயன்படுத்துவது பலனளிக்கும். நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் சமைக்கும் உணவை தவிர்க்க வேண்டும். அசுத்தமான தண்ணீரை குடிக்க கூடாது. தண்ணீரை கொதிக்க வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதற்கு முன்பு நன்றாக ஓடும் நீரில் கழுவி எடுக்கவும். கடல் உணவை நன்றாக சுத்தம் செய்து சமைக்கவும்.
வீட்டில் சமைத்த உணவுகளை மட்டுமே சாப்பிடுங்கள்.சூடான உணவுகள் பாதுகாப்பானவை. தெரு உணவுகளை தவிர்ப்பது பாதுகாப்பானது. அழுக்கடைந்த பொருள்களை அப்புறப்படுத்துங்கள். தொற்று உறுதியானால் மற்றவர்களிடமிருந்து விலகி இருங்கள். அறிகுறிகள் நீங்கினாலும் குணமடைந்த சில நாட்கள் வரை மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பதை தவிருங்கள்.