முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அச்சுறுத்தும் பறவை காய்ச்சல்..!! பால், முட்டை சாப்பிடலாமா..? மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை..!!

05:30 AM Apr 27, 2024 IST | Chella
Advertisement

கொரோனா வைரஸின் அச்சம் குறைந்துள்ள நிலையில், தற்போது உலகின் சில நாடுகளில் பறவைக் காய்ச்சல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கண்டறியப்பட்ட H5N1 வைரஸ், கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு வேகமாக பரவி வருகிறது. அங்குள்ள 8 மாநிலங்களில் உள்ள 29 பண்ணைகளில் வளர்க்கப்படும் பசுக்கள் மற்றும் கோழிகளில் இந்த வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பீதி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கேரளாவின் எல்லையோர மாவட்டங்கள் எச்சரிக்கப்பட்டுள்ளன.

Advertisement

உலக சுகாதார நிறுவனமானது பசுவின் பால், முட்டை மற்றும் கோழி இறைச்சியில் பறவைக் காய்ச்சல் வைரஸ் இருப்பதாக உறுதி செய்துள்ளது. இந்த வைரஸ் பாலில் கண்டறியப்பட்டதால் முட்டை மற்றும் பால் சாப்பிடலாமா என்று பலர் சிந்தித்து வருகின்றனர். வீட்டில் இவற்றை எவ்வாறு கையாள்வது என்பது மிகவும் முக்கியம் ஆகும். குறிப்பாக, நன்றாக சமைத்து உண்ண வேண்டும் மற்றும் மஞ்சள் கரு கூட பச்சையாக இருக்கக் கூடாது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பாலின் பாதுகாப்பு Pasteurization-ஐ பொறுத்தது. பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ்களைக் கொல்லும், வணிக ரீதியாக கிடைக்கும் அனைத்து பாலும் இந்த செயல்முறைக்கு உட்படுகிறது. எனவே, சுத்திகரிக்கப்பட்ட பால் சாப்பிடுவதற்கு பாதுக்காப்பானது. முட்டை, பால் மூலம் பறவைக் காய்ச்சல் வருவதற்கான ஆபத்து மிகவும் குறைவு. சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினால் ஆபத்து இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Read More : ’மே 1 முதல் ஜாக்கிரதையா இருங்க’..!! இந்த மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை..!! – வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

Advertisement
Next Article