டிரம்பின் உயிருக்கு அச்சுறுத்தல்!. ஈரான் சதித்திட்டம்!. அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை!
டொனால்ட் டிரம்பிற்கு எதிரான ஈரானிய அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன என்று அமெரிக்கா உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசும் போட்டியிடுகின்றனர். ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் பெயர் அறிவிக்கப்பட்ட நாள் முதலே அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது. கருத்துக்கணிப்புகளும் கமலா ஹாரிசுக்கு ஆதரவாகவே உள்ளன. இதனிடையே கடந்த ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியாவில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரம்ப் உயிர் தப்பினார்.
இந்தநிலையில், டிரம்பிற்கு எதிரான ஈரானிய அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன என்று அமெரிக்கா உளவுத்துறை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து டிரம்ப்பின் பிரசார தகவல் தொடர்பு இயக்குநர் ஸ்டீவன் சியுங் கூறியதாவது: அமெரிக்காவில் சீர்குலைவு மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் ஈரானின் முயற்சி பற்றி அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த சில மாதங்களில் தொடர்ச்சியாக தாக்குதல்களை அமெரிக்க தேசிய புலனாய்வு அடையாளம் கண்டுள்ளது. டிரம்ப்பின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அமெரிக்க அதிபர் தேர்தல் எவ்வித இடையூறுமின்றி நடத்தவும் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர் என்று கூறினார்.
Readmore: ‘உடனடியாக லெபனானை விட்டு வெளியேறுங்கள்’!. இந்திய தூதரகம் எச்சரிக்கை!