For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"எங்களை நம்பி வருவோருக்கு நிச்சயம் இது கிடைக்கும்"..!! கூட்டணிக்கு அழைப்பு விடுத்த விஜய்..!!

Vijay, who has entered politics ahead of the 2026 elections, has called on the alliance to give a share of power to those who believe.
07:53 AM Oct 28, 2024 IST | Chella
 எங்களை நம்பி வருவோருக்கு நிச்சயம் இது கிடைக்கும்      கூட்டணிக்கு அழைப்பு விடுத்த விஜய்
Advertisement

2026 தேர்தலை எதிர்நோக்கி அரசியலில் இறங்கியுள்ள விஜய், நம்பி வருபவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு அளிப்போம் என்று கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement

விழுப்புரம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதில் பேசிய விஜய், “தமிழ்நாட்டு மக்கள் நம்மைத் தனிப்பெரும்பான்மையுடன் ஜெயிக்க வைப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும், அந்த நிலையை நாம் நிறைவாக அடைந்தாலும், நம்மையும், நம் செயல்பாட்டையும் நம்பி நம்மோடு சில பேர் வரலாம்.

அதற்கான அரசியல் சூழல் உருவாகலாம். அப்படி வருவோரி நாம் அரவணைக்க வேண்டும் அல்லவா..? அதனால், நம்மை நம்பி வருகிறவர்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு தந்து அதிகாரப் பகிர்வு செய்யப்படும். 2026ஆம் ஆண்டு புதிய அரசியல் களத்தின் புத்தாண்டு. என்னடா இந்த விஜய் யார் பெயரையும் நேரடியா சொல்ல மாட்டேங்குறான். யார் பெயரையும் அழுத்தமாக சொல்ல மாட்டேங்குறான், இவனுக்கு என்ன பயமா என்று சிலர் கூறுகின்றனர்.

நான் சொல்வது என்னவென்றால், சிலரின் பெயர்களை நான் சொல்லாமல் விட்டதற்குக் காரணம், சொல்ல தைரியம் இல்லை என்றெல்லாம் கிடையாது. இங்கே யாருடைய பெயரையும் சொல்லி தாக்குவதற்கு நாங்கள் இங்கு வரவில்லை. மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்து டீசண்டா அரசியல் செய்யதான் இங்கு வந்திருக்கிறோம். எங்களுடைய அரசியல் எதிரியாக இருந்தாலும் சரி, சித்தாந்த எதிரியாக இருந்தாலும் சரி டீசன்ட் அணுகுமுறைதான், டீசன்ட் அட்டாக் தான். ஆனால், அது ஆழமாக இருக்கும்" என்றார்.

Read More : திமுக, பாஜகவை அட்டாக் செய்த விஜய்..!! அதிமுகவை மட்டும் விட்டு வைத்தது ஏன்..? எதிர்காலத்தில் இது நடந்தாலும் நடக்கலாம்..!!

Tags :
Advertisement