புதுசா வீடு கட்டப்போறவங்க பாத்ரூம் அமைக்கும்போது கவனம்..!! இங்கு மட்டும் வேண்டாம்..!! காரணத்தை தெரிஞ்சிக்கோங்க..!!
வாஸ்து சாஸ்திரத்தை பொறுத்தளவில் நம் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். பொருட்களை சரியான இடத்தில் வைப்பதற்கும் சரியான திசையை நிர்ணயிப்பதற்கும் வாஸ்து இன்றியமையாததாக பார்க்கப்படுகிறது. இந்த விதிகள் அனைத்தையும் நாம் சரியாகப் பின்பற்றினால், எப்போதும் மகிழ்ச்சியாகவும், வளமாகவும் வாழலாம். அதேபோல், வீட்டில் கழிப்பறைக்கு ஒரு குறிப்பிட்ட இடம் மற்றும் திசை இருக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனாலும் ஒரு சிலரது வீட்டில் படிக்கட்டுக்கு அடியில் கழிப்பறை கட்டப்பட்டு இருக்கும். வீட்டின் படிக்கட்டுக்கு அடியில் கழிப்பறை கட்டினால், அது பல எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், வீட்டின் செழிப்பையும் தடுத்து நிதி இழப்பையும் ஏற்படுத்தும். மேலும் இது குறித்து விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
படிக்கட்டுக்கு அடியில் கழிப்பறை கட்டுவது சரியா..?
* படிக்கட்டுகளின் கீழ் கழிப்பறை கட்டுவது பிழையான விஷயமாக கருதப்படுகிறது. அதையும் மீறியிருந்தால், வீட்டில் வசிப்பவர்களுக்கு பல எதிர்மறை விளைவுகளை ஏற்படும்.
* குடும்பத் தகராறுகள் முதல் நிதி இழப்புகள் வரை அனைத்தையும் இது தாக்கும்.
வீட்டில் உள்ள அனைத்து நேர்மறை ஆற்றல்களும், எதிர்மறை ஆற்றலாக மாறும். இதன் காரணமாக, முக்கிய ஆற்றல் வீட்டை விட்டு வெளியேறுகிறது. இதனால் வீட்டில் மந்தமான உணர்வு, வீட்டில் உள்ளவர்களிடையே ஊக்கமின்மை, நேர்மறை ஆற்றல் இல்லாமை போன்றவை ஏற்படும்.
* வீட்டிற்குள் பல நோய்கள் வருவதோடு, பல உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படும்.
* வீடு முழுவதும் எதிர்மறை அலைகளை உருவாக்கி, வீட்டில் பணப்புழக்கம் குறையும்.
* அதையும் மீறி உங்கள் வீட்டில் படிக்கட்டுகளுக்கு கீழ் கழிப்பறை இருந்தால், நீங்கள் இந்த முறையை முயற்சித்து பார்க்கலாம்.
என்ன செய்யலாம்..?
* உங்களால் முடிந்தால் அந்த இடத்தை இடத்தை கழிப்பறையாக பயன்படுத்த வேண்டாம். குளியலறையுடன் இணைக்கப்பட்டிருந்தால், அதில் துணிகள் போன்றவற்றைத் துவைக்கலாம்.
* வீட்டில் வாஸ்து குறைபாட்டை தவிர்க்க, நீங்கள் வாஸ்து எந்திரம் அல்லது படிகத்தை பயன்படுத்தலாம். இதன் மூலம் எதிர்மறை சக்தியை குறைக்கலாம்.
* அந்த இடத்தில் கண்ணாடிகள், செடிகள், ஓவியங்கள் போன்றவற்றை வைத்தால் எதிர்மறை ஆற்றல் நீங்கும்.