For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடுக்குமாடி குடியிருப்பில் வீடு...! யார் யார் இதற்கு விண்ணப்பிக்கலாம்...? என்னென்ன ஆவணங்கள் தேவை...?

06:51 AM Nov 30, 2023 IST | 1newsnationuser2
அடுக்குமாடி குடியிருப்பில் வீடு     யார் யார் இதற்கு விண்ணப்பிக்கலாம்     என்னென்ன ஆவணங்கள் தேவை
Advertisement

அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் பேரூராட்சி போடூர் திட்டப்பகுதி, பொ.மல்லாபுரம் பேரூராட்சி அருகில் உள்ள கொண்டஹரஹள்ளி திட்டப்பகுதி, அரூர் அருகில் உள்ள நம்பிப்பட்டி & பீச்சான்கொட்டாய் திட்டப்பகுதி, காரிமங்கலம் அருகில் உள்ள முக்குளம் திட்டப்பகுதி மற்றும் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டை திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த வீடுகளுக்கான பயனாளிகள் தேர்வுசெய்யப்பட உள்ளதால் தருமபுரி மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட திட்டப்பகுதிக்கு அருகில் வசித்து வரும் சொந்த வீடில்லாத பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். குடும்பத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளார் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், குடும்பத்தாரின் புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

பயனாளிகள் ஆண்டு வருமானம் 3 இலட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும். இக்குடியிருப்புக்கு அரசினால் நிர்ணயிக்கப்பட்ட பயனாளி பங்கீட்டு வாரியத்திற்கு முன் பணமாக செலுத்த வேண்டும். குடும்பத்தினருக்கு, சொந்த வீடோ, நிலமோ இல்லை எனவும் அரசு வழங்கும் குடியிருப்பை விற்கவோ அல்லது குத்தகைக்கு விட மாட்டேன் என்ற உறுதிமொழி படிவம், விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட திட்ட பகுதிகளில் 04.12.2023 வரை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement