இந்த வகை பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை..!! இனி சாலைகளில் ஓட்ட முடியாது..!! மீறினால் என்ன நடக்கும் தெரியுமா..?
இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசு மட்டுமல்ல, பல மாநில அரசுகளும் இதையே விரும்புவதாக கூறப்படுகிறது. ஏனென்றால், இதற்கு முக்கிய காரணமே பெட்ரோல், டீசல் மூலமாக வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாடு தான்.
அதுவும் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலைமைக்கு சென்று விட்டது. இருப்பினும், வாகனங்கள் இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த காற்று மாசுபாடு பிரச்சனையால், அங்கு மக்கள் பல்வேறு வகையான சுவாச நோய்களுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில், பிஎஸ் 3 பெட்ரோல் மற்றும் பிஎஸ் 4 டீசல் (BS 4 Diesel) வாகனங்களை டெல்லி சாலைகளில் இயக்குவதற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறும் வாகனங்களுக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அமலுக்கு வந்த முதல் நாளில் மட்டும் சுமார் 550 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ.1.10 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் புதிய விதிமுறைகளை மீறி வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.5.95 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
Read More : லண்டனில் ரகசியமாக அண்ணாமலையை சந்தித்த விஜய்..? அடுத்த நிமிடமே பாஜகவினருக்கு பறந்த உத்தரவு..!!