“இது என்னுடைய கதை இல்ல..” அஜித்தின் விடாமுயற்சி படம் குறித்து இயக்குனர் சொன்ன ஷாக் தகவல்..
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி உள்ள விடாமுயற்சி படம் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். 'பிரேக்டவுன்' என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி உள்ளது. த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் படத்தின் ரீலீஸ் தள்ளிப்போனது. இதை தொடர்ந்து பிப்ரவரி 6-ம் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர், ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி, சமீபத்தில் பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் படத்தின் கதையை தெளிவுபடுத்தியுள்ளார். அப்போது பேசிய அவர் “இந்தக் கதை என்னுடையது அல்ல. அஜித் சாரை முன்னணியில் வைத்து ஒரு ஆக்ஷன் த்ரில்லரை உருவாக்க விரும்பினேன். இருப்பினும், இந்த திரைக்கதையை அஜித் சார் தான் பரிந்துரைத்தார்.
அவரின் இமேஜுக்கும் இந்தப் படத்தில் அவரின் கேரக்டருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது ஒரு மாஸ் கமர்ஷியல் படம் அல்ல, எனவே ரசிகர்கள் அதை எதிர்பார்க்கக்கூடாது. அஜித் சார், இந்த வகையான படத்திற்கான ஒரு தொலைநோக்குப் பார்வையைக் கொண்டிருந்தார், அதை அவர் நிஜமாக்க விரும்பினார்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “ விடாமுயற்சி திரைப்படம் அஜித் சாரின் தற்போதைய இமேஜை முழுமையாக பூர்த்தி செய்யும். இருப்பினும், நீங்கள் ஒரு வழக்கமான சூப்பர் ஹீரோவை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், இது உங்களுக்கான படம் அல்ல. இது ஒரு சாதாரண மனிதர் ஹீரோவாக மாறுவதைப் பற்றிய கதை, அதுதான் இதை தனித்துவமாக்குகிறது. ஒரு ஆக்ஷன் பட இயக்குநராக, இதுபோன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளில் பணியாற்றும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது.
இந்த திட்டத்திற்கு அவர் என்னை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று நான் கேட்க நினைத்தேன். நான் அதை கேட்பதற்குள் ஆனால் அஜித் சார் நமது ஆறுதல் மண்டலங்களிலிருந்து வெளியேறி வித்தியாசமான ஒன்றை உருவாக்குவோம்’ என்று கூறினார். அவர் வழங்கிய ஸ்கிரிப்ட்டில் என்னால் முடிந்ததைச் செய்ய நான் உறுதிசெய்தேன். நீங்கள் முன்கூட்டிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் இந்தப் படத்தைப் பார்த்தால், நீங்கள் நிச்சயமாக இந்த படம் உங்களுக்கு பிடிக்கும்.." என்று தெரிவித்தார்.
எனினும் விடாமுயற்சி' மற்றும் 'பிரேக்டவுன்' ஆகியவற்றுக்கு இடையேயான எந்த தொடர்பும் குறித்து கருத்து தெரிவிக்க மகிழ் திருமேனி மறுத்துவிட்டார். இருப்பினும், விடாமுயற்சியின் கதை, அஜித் மகிழ் திருமேனிக்கு பரிந்துரைத்த கதையை அடிப்படையாகக் கொண்டது என்பதும், இயக்குனர் தானே எழுதியது அல்ல என்பதும் தெளிவாகி உள்ளது.
Read More : தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய ஃபிளாப் படம் இதுதான்.. இந்தியன் 2, கங்குவா அளவுக்கு கூட வசூல் இல்ல…