For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Stalin: இதுமட்டும் நடக்கக்கூடாது!… தமிழ்நாடு அடுத்த காஷ்மீராக மாறிவிடும்!… முதலமைச்சர் ஸ்டாலின் விளாசல்!

06:21 AM Mar 24, 2024 IST | 1newsnationuser3
stalin  இதுமட்டும் நடக்கக்கூடாது … தமிழ்நாடு அடுத்த காஷ்மீராக மாறிவிடும் … முதலமைச்சர் ஸ்டாலின் விளாசல்
Advertisement

Stalin: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கண்ணுக்கு முன் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு அங்கு. ஐந்து ஆண்டுகளாக தேர்தல் நடக்காமல் இருக்கும் நிலைமையேதான் தமிழகத்திற்கும் வரும் என்று என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Advertisement

திருவாரூர் அருகே கொரடாச்சேரி அடுத்த ஊர்குடியில், தஞ்சாவூர் லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் முரசொலி, நாகை லோக்சபா தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் செல்வராஜ் ஆகியோரை அறிமுகப்படுத்தி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, லோக்சபா தேர்தலை பா.ஜ., ஆட்சியை வீழ்த்தும் தேர்தலாக நினைக்க வேண்டாம். இந்திய மாநிலங்களில் மக்கள் ஆட்சியையும், இந்தியாவின் பன்முக தன்மையையும், ஒடுக்கப்பட்ட மக்களை காப்பாற்றவும் பா.ஜ.,வை ஆட்சிக்கு வரவிடக் கூடாது.

பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், இந்தியாவில் கூட்டாச்சி இருக்காது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் பார்லிமென்ட் முறையே இருக்காது. கண்ணுக்கு முன் காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. இந்த நிலை நாளை தமிழகத்திற்கும் ஏற்படலாம். மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், மற்ற மாநிலங்களுக்கும், இந்த நிலை ஏற்படலாம். கடந்த 2014 முதல் ஆட்சி செய்யும் பா.ஜ., அரசு, இந்தியாவை எல்லா வகையிலும் பாழ்படுத்தியுள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளை பிரசாரத்தில் ஈடுபட முடியாத வகையில் கைது செய்து வருகின்றனர். பா.ஜ., ஜனநாயகத்திற்கு எதிராக ஆடும் ஆட்டம் அழுகுனி ஆட்டம். மோடி ஆட்சிக்கு வருவது நாட்டுக்கு நல்லது அல்ல. காவிரி உரிமைகளை விட்டுக்கொடுத்த பா.ஜ., அரசையும், அ.தி.மு.க., பழனிசாமியையும் டெல்டா மாவட்ட மக்கள் புறக்கணிக்க வேண்டும். ஆட்சி பொறுப்பில் இருந்து, பா.ஜ., வுடன் கூட்டணியில் இருந்த பழனிசாமி எந்த நன்மையும் செய்யாமல் துரோகங்கள் மட்டுமே செய்தார். தொல்லை தரும் கவர்னருக்கு எதிராக பழனிசாமி பேசுவதில்லை என்று முதலமைச்சர் பேசினார்.

Readmore: மகிழ்ச்சி.‌.! நாளையுடன் முடியும் பிளஸ் 1 பொதுத்தேர்வு…! 26-ம் தேதி முதல் கோடை விடுமுறை…!

Tags :
Advertisement