முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Post Office திட்டத்தில் மாதம் ரூ.1000 முதலீடு செய்தால்.. 5 வருடங்களில் எவ்வளவு கிடைக்கும்?

This Post Office Scheme is a Hit for the Common Man: Deposit Rs.1,700 Monthly and Get Rs.1,21,321 in 5 Years
03:27 PM Oct 24, 2024 IST | Mari Thangam
Advertisement

அஞ்சலகத்தின் சேமிப்புத் திட்டம் அரசாங்கத்தால் நடத்தப்படுவதால், அஞ்சல் அலுவலகத் திட்டத்திலும் முதலீடு செய்யலாம். அதில் முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. எனவே அதிகம் மக்கள் அஞ்சல் அலுவலக திட்டத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். எதிர்காலத்தில் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் ஒரு திட்டத்தை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisement

போஸ்ட் ஆபிஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் : போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் மற்ற அனைத்து திட்டங்களைப் போலவே பாதுகாப்பான அதேசமயம் உத்தரவாதமான வருமானம் வழங்கும் அரசாங்கத் திட்டம் ஆகும். குறைந்த ஆபத்து உள்ள சேமிப்பு திட்டத்தை விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாக அமைகிறது. இருப்பினும் மாதாந்திர தவணைகளை சரியான நேரத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். நீங்கள் ஒரு தவணையை தவறவிட்டாலும் மாதத்திற்கு 1 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

போஸ்ட் ஆபிஸ் RD 5 வருடங்களுக்கான திட்டம். 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்வதன் மூலம் நிறைய சேமிக்க வாய்ப்பு உள்ளது. தற்போது, ​​போஸ்ட் ஆபிசில் தொடர் வைப்பு நிதிக் கணக்குக்கான வட்டி விகிதம் 6.7 சதவீதம். இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.2000, ரூ.3000 அல்லது ரூ.5000 டெபாசிட் செய்தால், தற்போதைய வட்டி விகிதத்தின்படி எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பார்க்கலாம்.

டெபாசிட் செய்தால் முதிர்வு காலத்தில் எவ்வளவு கிடைக்கும்?

ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் RD ஐத் தொடங்கினால், 5 ஆண்டுகளில் மொத்தம் 3,00,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். போஸ்ட் ஆபிஸ் ஆர்டி கால்குலேட்டரின் படி, 6.7% வட்டியில் ரூ.56,830 கிடைக்கும். இந்த வழியில், முதிர்வு காலத்தில் கிடைக்கும் தொகை ரூ..3,56,830 ஆக இருக்கும்.

மாதம் 3,000 ரூபாய் RD ஐ தொடங்கினால், ஒரு வருடத்தில் 36,000 ரூபாய் வீதம் 5 ஆண்டுகளில் மொத்தம் 1,80,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். போஸ்ட் ஆஃபீஸ் ஆர்டி கால்குலேட்டரின் படி, தற்போதைய வட்டி விகிதத்துக்கு ரூ. 34,097 வட்டியாகக் கிடைக்கும். இதன் மூலம் முதிர்வு காலத்தில் மொத்தம் ரூ. 2,14,097 பெறலாம்.

ரூ.2,000 முதலீடு செய்தால் 5 ஆண்டுகளுக்கு மாதம் 2,000 ரூபாய் RD கணக்கு தொடங்கினால், ஆண்டுக்கு 24,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். 5 ஆண்டுகளில் முதலீடு செய்த அசல் தொகை 1,20,000 ரூபாயாக இருக்கும். இத்துடன் 5 வருடத்துக்கான 6.7% வட்டி ரூ.22,732 சேர்த்து ரூ.1,42,732 முதிர்வுத் தொகையைப் பெறலாம்.

RD திட்டத்தில் கடன் வசதி கிடைக்கும் : நீங்கள் போஸ்ட் ஆபிஸ் RD திட்டத்தில் முதலீடு செய்தால், அஞ்சல் அலுவலகம் மூலம் உங்களுக்கு கடன் வசதியும் வழங்கப்படுகிறது, ஆனால் இதற்கு நீங்கள் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து முதலீடு செய்வது போன்ற சில நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும். உங்கள் RD கணக்கில் 12 மாதங்கள் இருந்தால், உங்கள் வைப்புத் தொகையில் 50 சதவீதத்தை கடனாகப் பெறுவீர்கள்.

Read more ; ’இந்த உலகம் நல்ல மனிதரை இழந்துவிட்டது’..!! ‘Tarzan’ நடிகர் ரோன் ஈலய் காலமானார்..!! மகள் உருக்கமான பதிவு..!!

Tags :
Post Office Recurring Deposit Planpost office scheme
Advertisement
Next Article