சமையலுக்கு பயன்படுத்தப்படும் இந்த ஒரு பொருள் போதும்..!! கொலஸ்ட்ரால், தைராய்டு நோயை ஈசியா குணமாக்கலாம்..!!
நமது சமையலறையில் உள்ள கொத்தமல்லியை வைத்து, இயற்கையான முறையில் கொலஸ்ட்ரால், தைராய்டு பிரச்சனைகளை சரிசெய்யலாம். மேலும், இதில் அடங்கியுள்ள பல்வேறு நன்மைகளை பார்க்கலாம். நமது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதே, தைராய்டு நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாகும். தைராய்டு நோய், மனிதர்களின் இதயம், மூளை, கல்லீரல், சிறுநீரகங்கள், வாஸ்குலர் (இரத்த நாளங்கள்) அமைப்புகள், இரத்த அழுத்தம், செரிமானப் பாதை மற்றும் ஹார்மோன்களை உற்பத்தி செய்வதன் மூலம் வளர்சிதை மாற்றத்தின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கிறது.
ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் என இரண்டு வகையான தைராய்டுகள் உள்ளன. இந்த தைராடிசம் பிரச்சனையை போக்க நமது சமையலறையில் உள்ள கொத்தமல்லி பெரிதும் பயன்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உட்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் கொத்தமல்லியில் உள்ளன. இதில், வைட்டமின் ஏ, சி மற்றும் கே அதிகம் உள்ளது. தைராய்டு சுரப்பிக்கு கொத்தமல்லி விதைகள் பயன்படுத்தப்படுகிறது.
மேலும், கொழுப்பை கட்டுப்படுத்தவும், தைராய்டு ஹார்மோன்களைத் தடுக்க கொத்தமல்லி விதைகள் உதவுகின்றன. சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் எடை இழப்பை தூண்ட கொத்தமல்லி விதை நீர் மற்றும் டீ உதவுகிறது. முடி உதிர்வைக் குறைத்து, அடர்த்தியாக வளர கொத்தமல்லி பயன்படுகிறது. வாயு, வீக்கம், பிடிப்புகள், வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குமட்டல் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் கொத்தமல்லி உதவுகிறது.