'இதற்காகத்தான் அமெரிக்கா வந்தோம்’..!! ’ஆனா இப்போ என் மகன்’..!! நெப்போலியன் மகனை நேரில் சந்தித்த EX ஐபிஎஸ் ரவி..!!
நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷ் சிறு வயதிலேயே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், அவரை பார்ப்பதற்காக EX ஐபிஎஸ் ரவி அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் 80ஸ் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகராக இருந்தார். இவருடைய நடிப்பு மட்டுமல்லாமல் இவர் பாடிய ஒரு சில பாடல்களும் அதிகமான ரசிகர்களை கவர்ந்தது. அதிலும் அந்த "எட்டு பட்டி ராசாவை" பலராலும் மறக்க முடியாது. அந்த காலகட்டத்தில் சரத்குமார், ரஜினிகாந்த், கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தனக்கென்று ஒரு சிம்மாசனத்தை அமைத்துக் கொண்டவர் தான். ஆனால், ஒரு கட்டத்தில் தன்னுடைய நடிப்புக்கு முழுக்கு போட்டு அரசியலில் முழு கவனம் செலுத்த தொடங்கிய நெப்போலியன் திமுக ஆட்சிக்காலத்தில் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார்.
ஆனால், அந்த நேரத்தில் தன்னுடைய மகனுக்கு ஏற்பட்ட உடல்நல குறைபாடு காரணமாக அரசியலை விட்டு விலகிய நெப்போலியன் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார். அங்கு சொந்தமாக கம்பெனி ஒன்றை நடத்தி வரும் அவர் விவசாயத்தையும் செய்து வருகிறார். அதுபோல நெப்போலியனுக்கு ஜெயசுதா என்ற மனைவியும் தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், நடிகர் நெப்போலியனின் இளைய மகன் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்கிறார்.
மூத்த மகன் உடல் நல குறைவால் இருப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அவர் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு நான்கு வயது இருக்கும்போது இந்த நோயை கண்டுபிடித்து விட்டார்களாம். அவர் 10 வயதுக்கு மேல் நடக்க மாட்டார் என்று அப்போது மருத்துவர்கள் சொன்னார்களாம். அவர்கள் சொன்னபடியே 10 வயதுக்கு மேல் தனுஷால் நடக்க முடியாமல் போய்விட்டதாம். அந்த நேரத்தில் உலகம் முழுவதும் தேடியும் இந்த நோயை குணப்படுத்த மருந்து கிடைக்கவில்லையாம்.
அப்போது திருநெல்வேலி பக்கத்தில் ஒரு ஊரில் பாரம்பரிய வைத்தியம் மூலம் இதனை படிப்படியாக குணப்படுத்த முடியும் என்று தெரிந்து கொண்டாராம். உடனே தன்னுடைய மகனை அங்கே அழைத்துச் சென்று சிகிச்சை எடுத்து வந்து இருக்கிறார். அந்த இடத்தில் தன் குழந்தையைப் போல பாதிக்கப்பட்டவர்கள் வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும் பொருட்டு ஒரு மருத்துவமனையை நெப்போலியன் கட்டி இருக்கிறார். இந்நிலையில் தான், நெப்போலியனின் மகன் தனுஷை பார்ப்பதற்காக EX ஐபிஎஸ் ரவி அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.
அங்கு தனுஷை சந்தித்த ரவி வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ரவி பேசுகையில், தம்பி நான் உன்னை பார்க்கிறதுக்காகத்தான் அமெரிக்காவுக்கு வந்து இருக்கிறேன். நீ உன்னை போன்று இருக்கும் ஸ்பெஷல் குழந்தைகளுக்கு முன் உதாரணமா இருக்கிற. உன்னுடைய அறிவை பார்த்து உன்னுடைய அப்பா மட்டுமல்ல எல்லோருமே பெருமைப்படுறாங்க. அதோடு நெப்போலியனிடம் நீங்கள் உங்கள் மகனைப் போன்று இருப்பவர்களுக்காக ஒரு ஹாஸ்பிட்டலையே கட்டிக் கொடுத்திருக்கீங்க. நம்ம மகனை மாதிரி யாரும் தசை சிதைவு நோய்க்கு ஆளாகி விடக்கூடாது என்பதற்காக நீங்க எடுத்த முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.
அதோடு தனுஷிடம் தம்பி நீ என்ன சொல்லுற என கேட்க... அதற்கு தனுஷ், விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால்… நாம் எழுந்து உட்கார முடியாது என்று பலர் சொன்னாலும், நம்மளுடைய உடல் பிரச்சனைகளும் நம்மை பாதிக்காது என்று கூறியிருக்கிறார். அதைத்தொடர்ந்து பேசிய நெப்போலியன், நான் என்னுடைய மகன் தனுஷின் லைஃப் ஸ்டைலுக்காக தான் இந்தியா இந்தியாவை விட்டு நான் என்னுடைய மனைவி குழந்தைகளோடு அமெரிக்காவுக்கு வந்தேன். அவன் இங்க வந்த பிறகு ரொம்பவே சந்தோஷமா இருக்கிறான். அவனால் எல்லாமே இப்போ முடியும் என்ற ஒரு கான்ஃபிடன்ஸ் அவனுக்கு வந்திருக்கு. தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எழுந்து நடக்க முடியாது என்று மருத்துவர்கள் சொன்னாலும் இன்று என்னுடைய மகன் அவனுடைய வேலைகள் எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் அவனுடைய கான்ஃபிடன்ட் தான் என்று நெப்போலியன் பெருமையாக பேசியுள்ளார்.