முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மசோதாக்களை திருப்பி அனுப்பியது இதற்காகத்தான்..!! சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை உடைத்த ஆளுநர் தரப்பு..!!

05:13 PM Nov 20, 2023 IST | 1newsnationuser6
Advertisement

துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி விதிப்படி அரசு செயல்படாததால் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மசோதாக்களை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் பாரதியார் பல்கலைக் கழகம் உள்ளிட்ட 3 பல்கலைக் கழக துணைவேந்தர் தேடுதல் குழு விவகாரத்தில் ஆளுநர் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. அதில், உச்சநீதிமன்ற விதிப்படி துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி ஒருவர் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் தேடுதல் குழுவில் யுஜிசி விதிப்படி அரசு செயல்படாததால் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக ஆளுநர் தரப்பு கூறியுள்ளது.

இதேபோல் முன்னாள் அமைச்சர்கள் மீதும் விசாரணை நடத்த அனுமதி கோரி, கடந்த 2022 செப்டம்பர் 12ஆம் தேதி தமிழ்நாடு அரசு அனுமதி கோரியிருந்தது. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ள ஆளுநர் தரப்பு, முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜயபாஸ்கார் மீதான விசாரணைக்கு ஆகிய இருவர் மீதும் விசாரணை நடத்த கடந்த 13ஆம் தேதியே ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்தது.

மேலும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான விசாரணைக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பான கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாகவும், கே.சி.வீரமணி மீதான விசாரணைக்கு ஒப்புதல் தர அரசிடம் விவரம் கேட்கப்பட்டதாகவும், தமிழ்நாடு அரசு அளித்த விவரம் நேற்று முன்தினம் பெறப்பட்டதாகவும் ஆளுநர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சிறைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான தமிழ்நாடு அரசின் மசோதா குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு பரிந்துரைத்த 165 கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், 53 கைதிகளை விடுவிப்பது தொடர்பான கோரிக்கை பரிசீலினையில் உள்ளதாகவும் ஆளுநர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ஆளுநர் ஆர்.என்.ரவிஉச்சநீதிமன்றம்தமிழ்நாடு அரசு
Advertisement
Next Article