குழந்தைகள், இத்தனை மணி நேரம் தான் செல்போன் பார்க்க வேண்டும்... நிபுணர்கள் கூறும் அறிவுரை...!
தற்போது உள்ள காலகட்டத்தில் அநேகரின் நேரத்தையும் கவனத்தையும் உறிஞ்சும் மிருகமாக மாறியுள்ளது செல்போன். ஆம், செல்போன் பல நன்மைகளை கொண்டிருந்தாலும் அதற்க்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தவிர்ப்பவர்கள் உண்டு. இந்த அடிமைத்தனம் பெரியவர்களுக்கு மட்டும் இன்றி சிறுவர்கள், ஏன் அநேக குழந்தைகளுக்கு கூட உள்ளது என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை. பெரியவர்கள், தாங்கள் வேலை செய்யும் போது தங்களை குழந்தைகள் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக அவர்கள் கையில் செல்போனை கொடுத்து விடுகின்றனர்.
1 வயதுக்க்குட்பட்ட குழந்தைகள் கூட பல மணிநேரம் செல்போன் பார்க்கும் அவல நிலை உருவாகியுள்ளது. ஆனால் இது முற்றிலும் தவறு. ஆம், 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செல்போன் பார்க்க பரிந்துரைக்கப்படவில்லை. 2-5 வயது குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 1 மணி நேரத்திற்கு மேல் திரைகளை பார்க்கக் கூடாது. 5-8 வயது குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 2 மணி நேரத்திற்கு மேல் செல்போன் பார்க்கக் கூடாது. 13 வயதுக்குப் பிறகு மட்டுமே சமூக ஊடகங்கள் குறித்த அறிமுகம் இருக்க வேண்டும், அவற்றில் தீவிர ஈடுபாடு 16-18 வயதுக்குப் பிறகு இருக்கலாம்.
நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட இந்த கால அளவுகளை விட உங்க பிள்ளைகள் செல்போன் பயன்படுத்தினால் அதை உடனடியாக நிறுத்தி விடுங்கள்.. உங்கள் பிள்ளைகளிடம் இருந்து செல்போனை வாங்குவது மிக மிக கடினமான ஒன்று தான். இதை சற்று சுலபமாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை நீங்கள் பின் பற்றலாம்.
குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 1-2 மணி நேர தீவிர உடற்பயிற்சி தேவைப்படுகிறது. அதனால் நீங்கள் அவர்களுக்கு டென்னிஸ், பேட்மிண்டன், நீச்சல் போன்ற பயிற்சிகளை கொடுக்கலாம். குடும்பத்துடன் சேர்ந்து ஏதாவது செயல்களில் ஈடுபடுவது, ட்ரெக்கிங், போன்ற வெளிப்புற விளையாட்டுகள் அவர்களை உடல் ரீதியாக ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
குழந்தைகளை அன்றாட வீட்டு வேலைகளில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்கள் செல்போன் பயன்படுத்தும் நேரத்தைக் குறைக்கலாம். குழந்தைகளை திரையில் இருந்து விலக்கி வைக்க, படிப்பதில் ஆர்வத்தை ஊக்குவித்து, விவாதங்கள், நாடகம், வெளிப்புற விளையாட்டுகள் போன்ற பிற நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கலாம். அவர்களை வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை குடும்பத்தோடு வெளியே அழைத்துச் செல்லுங்கள்.
Read More : ”2026இல் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி”..!! ”திமுகவின் குடும்ப ஆட்சி அகற்றப்படும்”..!! தவெக அதிரடி..!!