’கமல் படங்களில் நடிகைகளுக்கு இந்த நிலைமை தான்’..!! ’கண்டிப்பா அது இருக்கும்’..!! ’இதுக்குத்தான் நான் நடிக்கல’..!! ராதிகா பரபரப்பு தகவல்..!!
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர், கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நிலையில், படுதோல்வி அடைந்து கடுமையான ட்ரோல்களை சந்தித்தது.
இந்தியன் 2 படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார். தற்போது, இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான், நடிகர் கமல்ஹாசன் குறித்த ஒரு தகவலை நடிகை ராதிகா பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், ”கமல்ஹாசன் படம் என்றாலே கண்டிப்பாக அதில் கதாநாயகியுடன் நெருங்கி பழகும் காட்சிகள் இருக்கும். இதன் காரணமாக சில நடிகைகள் பயந்து கொண்டு அவருடன் நடிக்க மறுத்துள்ளனர். அந்த வகையில், நானும் அதுபோல் நடிக்க மறுத்தேன். அதற்காக எனக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது” என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
தற்போது, நடிகை ராதிகா கூறிய விஷயம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு கமல்ஹாசன் கட்டாயப்படுத்தித்தான் நடிகைகளை நடிக்க வைக்கிறாரா? என்று ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.