For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

முன்னோர்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ பின்பற்றிய இரகசியம் இதுதான்..!!

This is the secret followed by ancestors to live healthy without disease
06:30 AM Nov 04, 2024 IST | Mari Thangam
முன்னோர்கள் நோயின்றி ஆரோக்கியமாக வாழ பின்பற்றிய இரகசியம் இதுதான்
Advertisement

அதிகாலையில் எழுந்ததும் விநாயகப் பெருமான் முன்னிலையில் குட்டுப் போடுதல் மற்றும் தோப்புக்கரணம் போடுதல் போன்றவை முன்னோர்களின் காலத்தில் இருந்தே வழக்கமாக உள்ளது.

Advertisement

இன்றைய வாழ்க்கை சூழலில் நம் முன்னோர்கள் கடைபிடித்த பெரும்பாலான பழக்க வழக்கங்களை நாம் மறந்து விட்டோம் அல்லது கடைபிடிக்க முடிவதில்லை. முன்னோர்களின் பழக்கவழக்கங்களை சிலர் மூடநம்பிக்கைகள் என்று முற்றாக ஒதுக்கி வைத்து விடுவதும் உண்டு.

முன்னோர்கள் பின்பற்றி வந்த ஒவ்வொரு வழக்க முறையிலும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. இது போன்று பல ஆரோக்கிய பழக்கங்களை நமது முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளனர். அதில் ஒன்றுதான் தோப்புக்கரணம் போடும் பழக்கம். காதுகளில் உள்ள 200 நரம்புகளில் சீராக இரத்த ஓட்டம் ஏற்படுவதற்கும் புதிய ரத்தம் உருவாகி ஞாபக சக்தியை வளர்ப்பதற்கும் குட்டுப் போடுதல் மற்றும் தோப்புக்கரணம் போடுதல் பெரிதும் உதவுகிறது.

சாதரணமாகக் கூட குழந்தைகளுக்கு மறதி ஏற்படாமல் இருக்க தோப்புக்கரணம் போடுவது, மோதிரக் கையினால் குட்டுப் போட வேண்டும் என்று கூறுகின்றனர். ஒவ்வொருவரும் அதிகாலையில் எழும்போது, வலதுபக்கம் திரும்பி படுக்கையில் இருந்து எழுந்திருக்க வேண்டுமாம். அப்படி செய்தால், அன்றைய நாளில் செய்யும் நீங்கள் செய்யப்போகும் அனைத்து காரியங்களும் வெற்றியடையுமாம்.

காலையில் எழுந்தவுடன் முதலில் உச்சரிக்கும் வார்த்தை நேர்மறைச் சிந்தனையோடு இருக்க வேண்டும். அது தெய்வப் பெயர்களாகக் கூட உச்சரிக்கலாம். காலையில் எழுந்து முதலில் உள்ளங்கையைப் பார்த்த பின் பூமியைத் தொட்டு வணங்கி, அதன் பின் காலைக் கடன்களைத் தொடர்ந்தால், ஒவ்வொரு நாளும் உற்சாகமாகச் செயல்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

Read more ; காசநோயை ஒழிப்பதில் இந்தியாவின் பங்கு.. WHO அங்கீகாரம்..! – மோடி வாழ்த்து..!!

Tags :
Advertisement