முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'அது என் குழந்தையே இல்ல..' ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்ய இது தான் காரணம்! - சீக்ரெட்டை உடைத்த சங்கீதா!

01:07 PM May 19, 2024 IST | Mari Thangam
Advertisement

நடிகர் ரெடின் கிங்ஸ்லி, சீரியல் நடிகை சங்கீதாவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், சமூக வலைத்தளத்தில் பரவிய விமர்சனங்களுக்கு சங்கீதா பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisement

தமிழ் சினிமாவில், தனித்துவமான பாடி லாங்குவேஜ் மூலம் மிக குறுகிய காலத்தில் பிரபலமானவர் ரெடின் கிங்கிலி. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவுடன் சேர்ந்து அவர் காமெடி நடிகராக நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் ரீச் கொடுத்தது.

அதனைத்தொடர்ந்து, ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்திருந்தார். மேலும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் , விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட தொடர்ந்து பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார். இதனையே திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரபல சீரியல் நடிகையான சங்கீதாவை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இது நடிகர் ரெடின் கிங்ஸ்லிக்கு முதல் திருமணம் என்றாலும் சங்கீதாவுக்கு இரண்டாவது திருமணம் ஆகும். சங்கீதாவுக்கு ஏற்கனவே கிருஷ் என்பவருடன் 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். சங்கீதாவுக்கு ஷிவியா என்கிற மகள் ஒருவரும் உள்ளார். ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்து கொண்ட பிறகு பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நடிகை சங்கீதா சமீபத்தில் அளித்த பேட்டியில், அது என்னுடைய குழந்தை இல்லை, அது என்னுடைய சகோதரியின் குழந்தை என தெரிவித்துள்ளார். மேலும், இந்த வயசுல கல்யாணம் தேவையா என்று பல கமெண்ட்ஸ்கள் வரும். மனதளவில் எனக்கு 18 வயது தான். அவருக்கு 22 வயது. நாங்கள் அப்படி தான் பேசி கொள்வோம். இங்குள்ள மக்களால் இதனை புரிந்து கொள்ள முடிவதில்லை. இதற்காகவே இருவரும் வெளிநாடு போய் செட்டில் ஆகி விடலாமா என்று கூட தோன்றும் என தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

பணத்துக்காக ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்ததாக சொல்வது குறித்து பேசிய சங்கீதா,  நானும் ஒன்னும் இல்லாமல் இருப்பவள் இல்லை. இதற்கு எல்லாம் விளக்கமே கொடுத்துட்டு இருக்க முடியாது. அவரிடம் என்னை கவர்ந்த விஷயம் என்றால் அது அவரின் அரவணைப்பு குணம் தான். இது தான் நான் அவரை திருமணம் செய்துகொள்ள காரணம் என கூறியுள்ளார்.

‘IPL 2024 ஃபைனலுக்கு இந்த ரெண்டு டீம் தான் போகும்’- ஹர்பஜன் சிங் கணிப்பு

Tags :
redin kingsley
Advertisement
Next Article