’இனி பெண்களை சீண்டினால் இந்த தண்டனை தான்’..!! கதிகலங்க வைக்கும் மசோதாக்கள்..!! பரபர தகவல்..!!
இந்தியாவில் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் என 3 வகைகளாக உள்ளன. இந்த 3 சட்டங்களின் பெயர்களை மாற்றவும், சட்டப்பிரிவுகளில் புதிய வரையறைகள், விதிகளை சேர்க்கவும் மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து, மத்திய அரசு 3 சட்ட மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்தது. அதன்படி, இந்திய தண்டனை சட்டம் என்பதை பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் எனவும், குற்றவியல் நடைமுறை சட்டம் பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா எனவும், இந்திய சாட்சிய சட்டம் பாரதிய சாக்சியா என பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தது.
இதையடுத்து, தற்போதைய நாடாளுமன்ற குளிர்கால தொடரில் இந்த 3 சட்ட மசோதாக்களிலும் திருத்தம் செய்து மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தான் புதிய 3 சட்ட திருத்த மசோதாக்கள் பற்றியும், அதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்தும் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில், லவ் ஜிஹாத் போன்ற அச்சுறுத்தல்களை தடுக்கும் வகையில் இந்த மசோதாக்களில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து பெண்ணுடன் உடலுறவு வைப்பது, பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டுவதற்கு உண்மையான அடையாளத்தை மறைப்பது உள்ளிட்டவை கிரிமினல் குற்றங்களாக வரையறை செய்யப்பட்டுள்ளன. மேலும், தவறான வாக்குறுதிகளை அளித்து பெண்ணுடன் உடலுறவு வைப்பது, பழகுவது உள்ளிட்டவையும் கிரிமினல் குற்றம் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு திருமணம் செய்வதாக கூறி ஆண் தன்னை ஏமாற்றிய பலாத்காரம் செய்ததாக பெண்கள் கூறும் குற்றச்சாட்டுகளை நீதிமன்றங்கள் விசாரித்து தீர்ப்பு வழங்கி வந்தன. முந்தைய இந்திய தண்டனை சட்டத்தில் இந்த குறிப்பிட்ட விஷயத்தில் பிரத்யேகமான வரையறை என்பது இல்லை. ஆனால், புதிய மசோதாவில் அதற்கான பிரத்யேக வரையறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டு பலாத்கார வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அந்த நபர்களுக்கு குறைந்தபட்சம் 20 ஆண்டு முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வழங்கவும் மசோதா வாய்ப்பு வழங்குகிறது. மேலும் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் ரீதியான துன்புறுத்தினால் அவர்களுக்கான தண்டனை மரண தண்டனை வரை நீட்டிப்பு செய்யவும் பரிந்துரை செய்கிறது.