For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’இது அம்மா கொடுத்த வாய்ப்பு’..!! ’நான் சாகுர வரைக்கும் அதிமுக தான்’..!! முன்னாள் MLA கருப்பசாமி பரபரப்பு தகவல்..!!

07:20 AM Feb 08, 2024 IST | 1newsnationuser6
’இது அம்மா கொடுத்த வாய்ப்பு’     ’நான் சாகுர வரைக்கும் அதிமுக தான்’     முன்னாள் mla கருப்பசாமி பரபரப்பு தகவல்
Advertisement

நான் பாஜகவில் இணையவில்லை. உயிருள்ளவரை அதிமுகவில்தான் இருப்பேன் என அவிநாசி முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் மற்றும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஒருவர் என 19 பேர் டெல்லியில் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தலைமையில் பாஜகவில் இணைந்ததாக என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ-க்கள் பட்டியலில், அவிநாசியில் 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை அதிமுக எம்எல்ஏ-வாக இருந்த ஏ.ஏ.கருப்பசாமி பெயரும் இருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், “காரைக்குடி முன்னாள் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, என்னை பாஜகவில் இணைய கேட்டார். நான் இணையவில்லை என்று தெரிவித்துவிட்டேன். ஜெயலலிதா இந்த கட்சியில் எனக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கி உள்ளார். இந்த கட்சியை விட்டு நான் வேறெந்த கட்சிக்கும் செல்லமாட்டேன் என தெரிவித்துவிட்டேன்.

எப்படி அந்த பட்டியலில் என் பெயர் வந்தது என்றே தெரியவில்லை. எனக்கும் இதுவரை பாஜகவின் பட்டியல் புலப்படவில்லை. பிப்ரவரி 9ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அவிநாசி வருவதை ஒட்டி, அந்த பணிகளில் ஈடுபட்டுள்ளேன். என் மீது தேவையற்ற வதந்தியை பரப்பி வருகின்றனர். ஜெயலலிதா கொடுத்த வாய்ப்புக்காக நான் என்றைக்குமே அதிமுக காரனாக மட்டுமே இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, சட்டப்பேரவையில் முதல்முறையாக பேசிய கருப்பசாமி, “கிராமத்து கோயில் பூசாரியை எம்எல்ஏவாக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா” என கிராமத்து மொழியில் பேசி வணங்கியதை கண்டு, அன்றைக்கு ஜெயலலிதா அவையில் வாய்விட்டு சிரித்ததை பலரும் மறக்க முடியாத ஒரு சம்பவமாக கட்சியில் இன்றைக்கும் சொல்லி வருகின்றனர். ஏற்கெனவே அதிமுகவில் பல ஆண்டுகளுக்கு முன்பு எம்.எல்.ஏவாக இருந்து, இப்போது செயல்படாத நிலையில் உள்ளவர்களையே பாஜக கட்சியில் சேர்த்துள்ளது என சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Tags :
Advertisement