உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரம் இதுதான்!. வைரஸ் காய்ச்சல் முதல் சுவாச பிரச்சனைகள் அபாயம்!. எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை!.
Pakistan's Lahore: உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரங்களில் பட்டியலில் பாகிஸ்தான் நாட்டின் லாகூர் நகரம் முதலிடத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய நகரம் லாகூர். இங்கு சுற்றுச்சூழல் மாசுபாடு அதிகம். இங்கு காற்றுக் தரக் குறியீடு 708 என்ற மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள வருடாந்திர பாதுகாப்பு எல்லை அளவை விட 86 மடங்கு அதிக காற்று மாசுபாட்டால் லாகூர் நகரம் சிக்கி தவித்து வருகிறது.இதனால் இந்நகரில் வசிக்கும் லட்சக்கணக்கானோர் கடுமையாக பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர். பயிர் கழிவுகள் எரிப்பாலும், 45 லட்சம் மோட்டார் சைக்கிள்கள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கார்கள், புகை வெளியேற்ற கட்டுப்பாடின்றி செயல்படும் தொழிற்சாலைகளாலும், இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மோசமான காற்றின் விளைவுகளில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க, பஞ்சாப் மாநில மூத்த அமைச்சர் மரியம் ஒளரங்கசீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இருமல், வைரஸ் காய்ச்சல் மற்றும் தொண்டை புண் உள்ளிட்ட சுவாச பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், மாஸ்க் மற்றும் கண்ணாடி அணிய வேண்டும் என சுகாதாரத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.