இந்த பாஸ்வேர்டு வச்சிருந்தா உடனே மாத்துங்க.. நொடியில் ஹேக் செய்யப்படும்..!! - எச்சரிக்கை
இணைய மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்தவாறே உள்ளன. இளைஞர்கல் முதல் வயதானவர்கள் வரை யாரையும் இந்த கும்பல் விட்டு வைப்பதில்லை. நாளுக்கு ஒரு மோசடி செய்தியாவது ஊடகங்களில் வெளி வருகிறது. ஆள் பெயர் தெரியாத நபர்களிடம் அதிக அளவில் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு முன்பு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் எச்சரித்தாலும் ஏமாறும் மக்களின் எண்ணிக்கை இன்னும் குறைந்தபாடில்லை. இந்த மாதிரியான மோசடிகளில் சிக்காமல் இருக்க நாம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். எந்த ஒரு கடவுச்சொற்களையும் யாரிடமும் பகிர கூடாது என்பது நமக்கு தெரியும். அதே வேளையும் எளிமையான கடவுச்சொற்களால் மோசடி நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.
உலகளவில் மிகவும் பொதுவான கடவுச்சொல் “123456” ஆகும். ஒரு ஹேக்கர் அதை உடைக்க ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தை எடுத்துக்கொள்வார் என்று நோர்ட்பாஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. “123456” என்ற கடவுச்சொல் சுமார் 45 லட்சம் கணக்குகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது. சைபர் பாதுகாப்பு நிகழ்வுகளை ஆராய்ச்சி செய்வதில் நிபுணத்துவம் பெற்ற சுயாதீன நிபுணர்களுடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
உலகளவில் இந்தக் பாஸ்வேர்டை பயன்படுத்திய 3,018,050 பயனர்களில் 76,981 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று ஆராய்ச்சி கணக்கிட்டுள்ளது. உலகில் அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டாவது கடவுச்சொல் '123456789' என்றும், இது இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் 4-வது கடவுச்சொல் என்றும் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் இரண்டாவது பாஸ்வேர்டு ‘Password’ ஆகும். கடந்த சில ஆண்டுகளில் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டு பட்டியலில் இது இடம்பிடித்து வருகிறது. அந்த வகையில் இந்த முறை, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் வாழும் மக்களுக்கு இது சிறந்த தேர்வாகவும் உள்ளது.
பணிக்காகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல பாஸ்வேர்டுகளை நிர்வகிப்பது கடினம் என்பதால், பெரும்பாலான மக்கள் பொதுவாகப் பயன்படுத்தப்படும் எளிதான பாஸ்வேர்டுகளை பயன்படுத்துகின்றன. இவற்றை நினைவில் வைத்து கொள்வது எளிது என்றாலும், ஹேக்கர்கள் அவற்றை எளிதில் ஹேக் செய்ய முடியும். எனவே இணைய பயனர்கள் இதுபோன்ற எளிதான பாஸ்வேர்டுகளையும் பயன்படுத்த வேண்டாம் என்று வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர், ஏனெனில் அவற்றை கிராக் செய்ய ஒரு வினாடிக்கும் குறைவாகவே ஆகும்.
உலகின் மிகவும் பொதுவான பாஸ்வேர்டுகளில் கிட்டத்தட்ட 78 சதவிகிதம் ஒரு நொடிக்குள் சிதைந்துவிடும் என்றும் NordPass ஆய்வு தெரிவிக்கிறது. பாஸ்வேர்டுகளின் பாதுகாப்பு தொடர்பான நிலைமை கடந்த ஆண்டைப் போலவே மோசமடைந்துள்ளது என்பதை இது காட்டுகிறது.
எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும்? ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்க, வலிமையான கடவுச்சொற்றொடர்களைப் பயன்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் 20 எழுத்துகள் நீளமாக இருப்பது நல்லது. சில ஆய்வுகள், எண்கள், எழுத்துக்கள் மற்றும் சிறப்பு சின்னங்களின் சீரற்ற கலவையுடன் கூடிய நீண்ட பாஸ்வேர்டுகளை கிராக் செய்வதற்கான வாய்ப்புகள் கணிசமாகக் குறைவு என்று காட்டுகின்றன.
மேலும், வெவ்வேறு கணக்குகளுக்கான கடவுச்சொற்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை பல காரணி அல்லது இரு காரணி அங்கீகாரத்தை அமைப்பது நல்லது.. உங்கள் மற்ற கணக்குகளில் ஒன்று ஹேக் செய்யப்பட்டால் அவற்றின் பாதுகாப்பை இது உறுதி செய்கிறது. இந்த சிக்கலான பாஸ்வேர்டுகளை நினைவில் கொள்வது கடினமாக இருந்தால், இணையத்தில் கிடைக்கும் இலவச பாஸ்வேர்டு நிர்வாக செயலிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தவும்.
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் முதல் 20 கடவுச்சொற்கள்
- 123456
- password
- 12345678
- 123456789
- abcd1234
- 12345
- qwerty123
- 1234567890
- india123
- 1qaz@wsx
- qwerty1qwerty
- 1234567
- Password
- India123
- Indya123
- qwertyuiop
- 111111
- admin
- abc123
Read more ; விசிக நிர்வாக மறுசீரமைப்பு.. விண்ணப்பம் செய்வதற்கான வறைமுறைகள் வெளியிட்ட திருமா..!!