For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”இது தான் லாஸ்ட் இனி கல்யாணத்துக்கு அப்புறம் தான்”..!! செவிலியருடன் அடிக்கடி உடலுறவு..!! கருவை கலைத்த மருத்துவர்..!!

The nurse, who became pregnant several times, asked the doctor to marry her.
05:35 PM Nov 06, 2024 IST | Chella
”இது தான் லாஸ்ட் இனி கல்யாணத்துக்கு அப்புறம் தான்”     செவிலியருடன் அடிக்கடி உடலுறவு     கருவை கலைத்த மருத்துவர்
Advertisement

சென்னை அமைந்தகரையில் உள்ளது பில்ரோத் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் கவுதம் என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர், அங்கு பணிபுரிந்து வந்த ஒரு செவிலியரிடம் எல்லை மீறி பழகியுள்ளார். செவிலியரை காதலிப்பதாக கூறி பலமுறை அவருடன் உல்லாசம் அனுபவித்துள்ளார்.

Advertisement

இதனால், பலமுறை கர்ப்பமான அந்த செவிலியர், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மருத்துவரிடம் கேட்டுள்ளார். பிறகு செய்து கொள்கிறேன் எனக்கூறி நாடகம் நடித்தி கருவையும் கலைக்க செய்துள்ளார். ஒரு முறை அல்ல பலமுறை இந்த சம்பவம் அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது.

பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த செவிலியர் இதுகுறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த அந்த செவிலியர் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் மருத்துவர் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தனது தாயிடம் உன்னை அறிமுகப்படுத்த வேண்டும் என அவரது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததகாவும், பலமுறை கருக்கலைப்பு செய்ததாகவும் அந்த செவிலியர் தனது புகார் மனுவில் கூறியுள்ளார். இதையடுத்து, மருத்துவர் கவுதமை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Read More : மத்திய அரசு நிறுவனத்தில் வேலை..!! அதுவும் சென்னையில்..!! மாதம் ரூ.38,483 சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
Advertisement