2025 புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடு இதுதான்!. அப்படியே கடைசி நாடு எது தெரியுமா?
New Year 2025: 2024ம் ஆண்டின் இறுதி நாளை நெறுங்கிவிட்டோம். 2024 டிசம்பர் 31ம் தேதி இன்று ஆங்கில புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகிவருகிறார்கள். ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் என்பது உலகம் முழுவதும் தழுவிய கொண்டாட்டமாகும்.. இதற்கு சாதி, மதம், இனம், மொழி எதுவும் இல்லை.. உலக மக்கள் ஒன்றிணைந்து கொண்டாடும் முக்கியமான நாளாகும்.. பொதுவாக, பூமிப்பந்தின் ஒரு முனையில் பகலாக இருக்கும்போது, இன்னொரு முனையில் இரவாக இருக்கும்… அதை வைத்துதான் புத்தாண்டு பிறந்துவிட்டதாக கணக்கிடப்படுகிறது.. அந்த வகையில், புத்தாண்டை முதலில் கொண்டாடும் நாடு, கடைசியாக வரவேற்கும் நாடு எவை என்பதை பார்ப்போம்..!
பசிபிக் தீவு நாடுகளான டோங்கா சமோவா, கிரிபாட்டி நாடுகளில் முதன்முதலாக புத்தாண்டு பிறக்கிறது… அதாவது இந்திய நேரப்படி 31-ம்தேதி பிற்பகல் 3.30 மணி என்றால், இவர்களுக்கு சரியாக அதிகாலை 12 மணி ஆகிவிடும்.. புத்தாண்டையும் வரவேற்க தயாராகிவிடுவார்கள்.. உலகிலேயே முதல் முதலாக புத்தாண்டு இவர்களுக்கு பிறப்பதால், எப்போதுமே சற்று ஆடம்பரமாகவே கொண்டாடுவார்கள்.. லேசர் விளக்குள் ஒளிர, வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம் களை கட்டும்.. இந்திய நேரப்படி 31-ம்தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நியூசிலாந்து புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பமாகும்.
அடுத்ததாக இங்கிலாந்து நாட்டில் புத்தாண்டு கொண்டாடப்படும்.. இந்திய நேரப்படி நமக்கு மாலை 5.30 என்றால், இங்கிலாந்திலோ புத்தாண்டுக்கு நேரம் நெருங்கிவிடும்.. அதேபோல, ஜனவரி 1ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் துவங்கும்.. இதில், மாலை 5.30 மணிக்கு புத்தாண்டு பிறக்கும் கடைசி நாடாக இருப்பது பேக்கர் தீவு ஆகும். இது தான் புத்தாண்டு பிறக்கும் கடைசி தீவு நாடாகும். ஆக, ஒருநாள் முன்னதாக மாலை நேரத்தில் துவங்கும் புத்தாண்டானது, மறுநாள் மாலை வரை ஒவ்வொரு உலக நாடுகளும் கொண்டாடி மகிழ்கிறது.
இந்திய நேரப்படி புத்தாண்டைக் கொண்டாடும் நாடுகள்: இன்று (டிசம்பர் 31): பிற்பகல் 3:30 IST: கிரிபாட்டி, மாலை 4:30 IST : நியூசிலாந்து, மாலை 5:30 IST: பிஜி, ரஷ்யாவின் சிறிய பகுதி, மாலை 6:30 IST: ஆஸ்திரேலியாவின் பெரும்பகுதி, இரவு 8:30 IST: ஜப்பான், தென் கொரியா, இரவு 9.30 மணி IST: சீனா, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், இரவு 10.30 மணி IST தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளில் புத்தாண்டு பிறக்கும்.
நாளை(ஜனவரி 1): அதிகாலை 1.30 IST (ஜனவரி 1, 2024): யுஏஇ, ஓமன், அஜர்பைஜான், காலை 3.30 மணி IST: கிரீஸ், தென்னாப்பிரிக்கா, சைப்ரஸ், எகிப்து, நமீபியா, காலை 4.30 மணி IST: ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, மொராக்கோ, காங்கோ, மால்டா., காலை 5.30 மணி IST: இங்கிலாந்து, அயர்லாந்து, போர்ச்சுகல். காலை 8.30 IST: பிரேசில், அர்ஜென்டினா, சிலி. காலை 9.30 மணி IST: புவேர்ட்டோ ரிக்கோ, பெர்முடா, வெனிசுலா, அமெரிக்க விர்ஜின் தீவுகள், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள். காலை 10.30 IST: அமெரிக்க கிழக்கு கடற்கரை (நியூயார்க், வாஷிங்டன் டிசி, முதலியன), பெரு, கியூபா, பஹாமாஸ். காலை 11.30 IST: மெக்சிகோ, கனடாவின் சில பகுதிகள் மற்றும் யு.எஸ். பிற்பகல் 1.30 IST: அமெரிக்க மேற்கு கடற்கரை (லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, முதலியன). பிற்பகல் 3.30 IST: ஹவாய், பிரெஞ்சு பாலினேசியா. மாலை 4.30 IST: சமோவாவில் புத்தாண்டு பிறக்கும்.
Readmore: நோட்!. ஐடிஆர் முதல் பான் கார்டு வரை!. இதற்கெல்லாம் இன்றே கடைசி நாள்!.