முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட் தான் இது”..!! ராகுல் காந்தி கடும் விமர்சனம்..!!

Leader of Opposition Rahul Gandhi has criticized the budget tabled in the Lok Sabha for saving the seat.
04:41 PM Jul 23, 2024 IST | Chella
Advertisement

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கானது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Advertisement

2024-25ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் இன்று காலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆளும் ஆந்திர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பு நிதிகள் ஒதுக்கப்பட்டது. குறிப்பாக, ஆந்திராவுக்கு ரூ.15,000 கோடியும், பீகாருக்கு ரூ.26,000 கோடியும் சிறப்பு நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய பட்ஜெட்டை விமர்சித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்கான பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது. கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களை திருப்திப்படுத்தும் விதமாகவே பட்ஜெட் உள்ளது. சாமானிய இந்தியர்கள் எவ்வித பலனும் இல்லாத வகையில், ஏஏ-வுக்கு (AA - அம்பானி, அதானி) பலன் தரும் விதமாக பட்ஜெட் உள்ளது. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மற்றும் முந்தைய பட்ஜெட்டுகளை நகலெடுத்து ஒட்டியுள்ளனர்” என்று விமர்சித்துள்ளார்.

Read More : வைரலான மாணவியின் வீடியோ..!! உடனே ராகவா லாரன்ஸ் செய்த நெகிழ்ச்சி செயல்..!!

Tags :
எதிர்க்கட்சி தலைவர்மக்களவைமத்திய பட்ஜெட்ராகுல் காந்தி
Advertisement
Next Article