முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’இது ஆரம்பம்தான்’..!! ’2024இல் இன்னும் சில அமைச்சர்கள் சிறை செல்வார்கள்’..!! எச்சரிக்கும் அண்ணாமலை..!!

01:42 PM Dec 21, 2023 IST | 1newsnationuser6
Advertisement

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், ”பாஜக இத்தீர்ப்பை வரவேற்கிறது. தாமதமாக இருந்தாலும்கூட நல்ல தீர்ப்பு வந்துள்ளது. நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் ஊழல் இல்லாத சமுதாயம் அமைய இது ஒரு படிக்கல்லாக அமையும் என்று நம்புகிறோம். இது ஆரம்பம்தான். 2024ஆம் ஆண்டு மத்தியில் இன்னும் நான்கைந்து திமுக அமைச்சர்கள் சிறை செல்வார்கள். இன்றைய தீர்ப்பு பணத்தை வைத்து அரசியல் செய்யும் திமுகவுக்கு அனைத்தையும் புரட்டிப்போடும் தீர்ப்பு. நீதித்துறையின் செயல்பாட்டையும் ஆளுங்கட்சியையும் தொடர்புபடுத்தி பார்க்கக்கூடாது. பாஜகவில் இணைவார்கள் விமோசனம் பெறுவார்கள் என்பது எங்கள் மீதான பொய் குற்றச்சாட்டு" என்று தெரிவித்திருக்கிறார்.

Tags :
அண்ணாமலைசிறை தண்டனைசென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Next Article