For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெத்த அம்மாவை இப்படி செஞ்சிட்டான்..!! டிடிஎஃப் வாசன் டோட்டல் வேஸ்ட்..!! சரியான குப்பை..!! திடீரென பொங்கிய இயக்குனர்..!!

Selam has said angrily that TTF insulted me by making a video and earning money from it.
11:53 AM Oct 11, 2024 IST | Chella
பெத்த அம்மாவை இப்படி செஞ்சிட்டான்     டிடிஎஃப் வாசன் டோட்டல் வேஸ்ட்     சரியான குப்பை     திடீரென பொங்கிய இயக்குனர்
Advertisement

டிடிஎஃப் வாசனை இன்ஸ்டாகிராம், யூடியூப்பில் இவரை பலரும் பின்பற்றி வருகின்றனர். குறிப்பாக 17 வயது முதல் 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்தான் இவரின் ஃபாலோயர்ஸ்களாக இருக்கிறார்கள். ஆனால், இளைஞர்களை அவர் தவறாக வழிநடத்துவதாக இவர் மீது பலரும் புகார் கூறினார்கள். ஒருபக்கம் வாசன் பல சர்ச்சைகளிலும் சிக்கினார். நெடுஞ்சாலை ஒன்றில் பைக்கை வேகமாக ஓட்டும்போது கீழே விழுந்து விபத்தில் சிக்கினார். இதையடுத்து, அவரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது.

Advertisement

மற்றொரு பக்கம், மஞ்சள் வீரன் என்கிற படத்திலும் நடிக்க துவங்கினார். டிடிஎப் வாசன்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என பில்டப் கொடுத்தார் அப்படத்தின் இயக்குனர் செல்அம். ஆனால், சமீபத்தில் அப்படத்தில் இருந்து டிடிஎப் வாசனை நீக்குவதாக அறிவித்தார். ஆனால், நான்தான் பட பூஜை மற்றும் டெஸ்ட் ஷூட்டிக்கு எல்லாம் செலவு செய்தேன். என்னிடம் கேட்காமலேயே என்னை படத்தில் இருந்து தூக்கிவிட்டனர். இது நம்பிக்கை துரோகம் என்றெல்லாம் பொங்கினார் டிடிஎப் வாசன்.

இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசியுள்ள மஞ்சள் வீரன் இயக்குனர் செல்அம், 'வாசன் சொன்ன பேச்சை கேட்கமாட்டான். பெத்த அம்மாவை புழல் ஜெயில் முன்னாடி நிக்க வச்சான். அவன் டோட்டல் வேஸ்ட். சரியான குப்பை. மனுஷன் ஒரு தடவ தப்பு பண்ணலாம். வாழ்நாள் பூரா தப்பு பண்ணக் கூடாது. அவன் பைக் ஓட்டி இளைஞர்களை கெடுக்கறத முதலில் நிறுத்தணும். என்னை திட்டி வீடியோ போட்டு அதுல பணம் சம்பாதிச்சி என்னோட உழைப்புல சாப்பிட்டிட்டு இருக்கான்' என கோபமாக பேசியிருக்கிறார் செல்அம்.

Read More : உங்கள் போனில் இருக்கும் PDF File-களால் பெரும் ஆபத்து..!! உடனே செக் பண்ணுங்க..!!

Tags :
Advertisement