இந்த ஆவணம் உங்ககிட்ட இருக்கா..? அவசியம் தேவை..!! சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பை கவனிச்சீங்களா..?
வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், குழந்தையை பள்ளியில் சேர்க்க, கடவுச்சீட்டு மற்றும் விசா உரிமம் உள்ளிட்டவற்றுக்குப் பிறப்புச் சான்றிதழ் முக்கிய ஆவணமாக தேவைப்படுகிறது. பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூர்வச் சான்றிதழாகும். குழந்தையின் பெயரைப் பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையான பிறப்புச் சான்றிதழ் ஆகும். குழந்தை பிறந்ததும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுச் சுகாதாரத்துறை மூலம் பிறப்பு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
அந்த சான்றிதழ்களில், குழந்தை பிறந்த 15 ஆண்டுகளில் பெயர் சேர்க்க வேண்டும். அதவாது, 01.01.2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும் 01.01.2000-க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும் குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 2024 டிசம்பர் 31ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட சுகாதார இணை மற்றும் துணை இயக்குநர்கள், பள்ளி மாணவர்களின் பிறப்பு சான்றிதழ்களில் பெயர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
அதேபோல் பெயர் விடுபட்டிருந்தால், மாணவர்கள் மூலம் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கூறியுள்ளார். எதிர்காலத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இந்தாண்டுக்குள் பெயர் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
Read More : செம குட் நியூஸ்..!! வட்டி விகிதத்தில் மாற்றமில்லை..!! ஆனால், ஒரு ட்விஸ்ட்..!! வெளியான அறிவிப்பு..!!