முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குலதெய்வ வழிபாடு செய்ய இந்த நாள் சிறப்பானதாம்..!! மாதந்தோறும் இதை மட்டும் மறந்துறாதீங்க..!!

Full moon, a wonderful day when the full moon appears bright in the sky.
05:30 AM Dec 12, 2024 IST | Chella
Advertisement

பெளர்ணமி, முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும் அற்புதமான நாள். இந்நாளில் நல்ல அதிர்வலைகள் உலகில் வியாபித்திருக்கும். அப்படிப்பட்ட சக்தி மிகுந்த நாளில், குலதெய்வ வழிபாடு செய்தால், தீயசக்தியில் இருந்து நம்மைக் காக்கும். பௌர்ணமி நாளில் குலதெய்வ கோயிலுக்குச் சென்று வழிபட்டால் மிகச் சிறப்பு. அதேபோல் வீட்டில் விளக்கேற்றி, லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபடுவதும் வீடு மனை முதலான செல்வங்களை வாங்குகிற பாக்கியத்தைக் கொடுக்கவல்லது.

Advertisement

ஒவ்வொரு பெளர்ணமி தினத்தன்றும் மாலையில், சந்திரன் தோன்றும் வேளையில், வீட்டில் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து குலதெய்வத்தை ஆராதிப்பது விசேஷமானது. பெளர்ணமி நாளில், குல்தெய்வ வழிபாடு மிக மிக முக்கியமானது. இந்த நன்னாளில், குலதெய்வக் கோயில் அருகில் இருந்தால், வழிபட்டு வருவது நன்மைகளை வாரி வழங்கும். சந்ததியினர் சிறக்க வாழ்வார்கள். குலதெய்வம் பூர்வீகக் கிராமத்தில், வெளியூரில் இருந்தால், மாதந்தோறும் பெளர்ணமி நாளில், குலதெய்வக் கோயிலுக்குச் செல்வது இயலாததாக இருந்தால், வீட்டில் விளக்கேற்றி குலதெய்வத்தை வழிபடலாம்.

குலசாமி படத்துக்கு மாலை அணிவித்து அல்லது பூக்களால் அலங்கரித்து குலசாமிக்கி சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கல் முதலான குலதெய்வத்துக்கு படையலிடும் உணவை நைவேத்தியமாகச் செய்து வேண்டிக்கொள்ளலாம். இதனை அக்கம் பக்கத்தினருக்கு வழங்கினால் நல்லது.

Read More : குழந்தைகளுக்கு அடிக்கடி இருமல் வருகிறதா..? இதை சாதாரணமா எடுத்துக்காதீங்க..!! நுரையீரல் தொற்று ஏற்படும் அபாயம்..!!

Tags :
Koviltempleகுலதெய்வம்கோயில்கள்வழிபாடு
Advertisement
Next Article