இது மட்டும் இருந்தால் போதும்..!! ரூ.50,000 கடனுதவி வழங்கும் மத்திய அரசு..!! சிறு, குறு வியாபாரிகளுக்கான சூப்பர் திட்டம்..!! விண்ணப்பிப்பது எப்படி..?
நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய - மாநில அரசுகள் பல்வேறு கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், எவ்வித ஆவணங்களின் உத்தரவாதமும் இன்றி, ஆதார் கார்டு அடிப்படையில் ரூ.50,000 கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடன் பெறுவது எப்படி..? என்பதை தற்போது பார்க்கலாம்.
சிறு வியாபாரிகள், தெருவோர வியாபாரிகளுக்கு எப்போது தொழில் பாதிப்புகள் ஏற்படும் என்பதை நம்மால் கணிக்க முடியாது. இதற்கு சிறந்த உதாரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு “கொரோனா” பெருந்தொற்றால் பெரும்பாலான சிறுதொழில் வியாபாரிகள், தெருவோர வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்கள் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டனர்.
அந்த வகையில், இவர்களை ஆதரிக்கும் வகையில் கடந்த 2020இல் “பிரதான் மாதிரி ஸ்வநிதி யோஜனா” என்ற கடன் உதவி திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் ஆதார் கார்டை பயன்படுத்தி முதலில் ரூ.10,000 கடனாக பெற முடியும். அதனை சரியான நேரத்தில் திரும்ப செலுத்தினால், அடுத்தகட்டமாக ரூ.20,000 கடனாக பெறுவீர்கள். இதையும் சரியாக செலுத்திவிட்டால், ரூ.50,000 வரை கடனுதவி பெற முடியும். கடனை திரும்ப செலுத்தும் கால அவகாசம் 12 மாதங்கள் ஆகும்.
கடனுதவிக்கு விண்ணப்பிக்கும் முறை:
* வர்த்தகர்கள் தங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி, பொதுத்துறை வங்கி/கிராமப்புற பொதுத்துறை வங்கிகளில் விண்ணப்பிக்கலாம்.
* மொபைல் நம்பரை ஆதாருடன் இணைத்திருக்க வேண்டும். இது E-KYC செயல்பாட்டை உறுதி செய்வதாகும்.
* கடன் பெறுவதற்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து (ULB) பரிந்துரை கடிதத்தை பெற வேண்டும்.
* தகுதியை சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும். இதை நீங்கள் அருகில் உள்ள பொதுத்துறை வங்கி கிளை அல்லது E-சேவை மையத்தில் பதிவு செய்யலாம்.