ஐயப்பனுக்கு 41 நாட்கள் விரதம் இருப்பது ஏன்..? இதன் பின்னணியில் இருக்கும் வரலாறு இதோ..
1949-ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் மூலவரான ஐயப்பன் சிலை சேதம் அடைந்தது. இதை தொடர்ந்து மதுரையை சேர்ந்த பி.டி.ராஜன் முயற்சியால் இப்போதுள்ள ஐயப்பன் சிலை புதிதாக செய்யப்பட்டு இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வலம் வர செய்து, பின்னர் கோவிலில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலை செய்யும் பணி கேரள மாநிலம் செங்கண்ணூரில் நடந்தது. தட்டான்விளை குடும்பத்தை சேர்ந்த நீலகண்ட பணிக்கர், ஐயப்ப பணிக்கர் ஆகியோர் இந்த சிலை செய்த சிற்பிகள். தற்போது அந்தச் சிலையே வழிபாட்டுக்குரியதாக இருந்து வருகிறது.
ஐயப்பனுக்கு எத்தனை நாட்கள் விரதம்?
சபரிமலையில் ஐயப்பனுக்கு இருக்கக் கூடிய விரதம் 41 நாட்கள் ஒரு மண்டலமாக கருதப்படுகிறது. பஞ்சபூதங்களின் அடக்கமாக இந்த விரதம் அமைந்திருப்பதால் இதை 41 நாட்கள் மேற்கொள்கிறார்கள். 4 1=5 என்ற கணக்கில் 41 நாட்கள் கணக்கிடப்படுகிறது. இதை 1 4=5 என்ற கணக்கின் அடிப்படையில் 14 நாட்கள் விரதம் இருக்கக் கூடாதா என்ற கேள்வி சிலருக்கு வரும். அப்படி எடுக்கக் கூடாது.
ஏனென்றால் எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் செய்தால் மட்டுமே அதன் பலன் நமது உடலுக்கும் ஆன்மாவிற்கும் முழுமையாக சென்று சேரும். சபரிமலை பயணத்திற்கு நம்மை தயார் செய்து கொள்வதற்காக, நமது உடலை பழக்கப்படுத்திக் கொள்வதற்காக தான் இந்த 41 நாள் கணக்கு. இதனால் தான் கார்த்திகையில் மாலை அணிந்து, மார்கழியில் மலைக்கு செல்லும் வழக்கம் ஏற்படுத்தப்பட்டது.
பின்னணியில் இருக்கும் வரலாறு ; மணிகண்டனைத் தீய எண்ணத்துடன் புலிப்பால் கொண்டு வரும்படி, காட்டுக்கு அனுப்பிய ராணியும், அவருக்குத் துணை போன மந்திரியும் 41 நாட்கள் பெரும் துன்பமடைந்தனர். அந்த நாட்களில், அவர்கள் விரும்பிய எதையும் சாப்பிட முடியாமல், உடலையும் வருத்திக் கொள்ள நேரிட்டது.
அவர்களது தீய எண்ணத்துக்குத் தண்டனையாகவே அந்த நாட்கள் முழுவதும் அமைந்தன. கடைசியில், காட்டிற்குள் சென்று திரும்பி வந்த ஐயப்பனிடம் அவர்கள் மன்னிப்பு வேண்டிச் சரணடைந்தனர். அவர்கள் இருவரும் 41 நாட்கள் துன்புற்றிருந்ததை நினைவுபடுத்தும் வகையிலேயே, ஐயப்ப பக்தர்கள் 41 நாட்களுக்கான விரதம் இருக்கும் நடைமுறை ஏற்பட்டது. பின்னர் அதுவே ஒரு மண்டலமாக, 48 நாட்களாக மாற்றம் பெற்றது.
Read more ; பெற்றோர்களே எச்சரிக்கை!!! தங்க செயின் அணிந்த 10 வயது சிறுவன், சடலமாக மீட்பு..