திருமணத்திற்கு முன்பு லிவிங்கில் இருக்க ஆசை! விருப்பம் தெரிவித்த பாரதி கண்ணம்மா ரோஷினி!
bharathi kannamma roshini: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முன்னணி சீரியலாக இருந்தது பாரதி கண்ணம்மா சீரியல். இதில், நடித்ததன் மூலம் நடிகை ரோஷினி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். ஹீரோயின் என்றாலே வெள்ளை நிறம் என்ற எண்ணத்தை மாற்றி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பாரதி கண்ணம்மா சீரியல் தான் இவருக்கு முதல் சீரியல் என்றாலும், தன்னுடைய அசாத்தியமான நடிப்பால், ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுவிட்டார்.
இதையடுத்து குக் வித் கோமாளி சீசன் 3ல் நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் இவர் கலந்துகொண்டார். நாடகத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய ரோஷினி, சினிமாவில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்பட்டது. அதற்காக, நாடகத்தால் பட வாய்ப்புகள் பரிபோவதால், அதிலிருந்து ரோஷினி விலகி சினிமாவில் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. அதற்காக, ஹோம்லி லுக்கில் காட்சி தந்த ரோஷினி, மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து தனது புகைப்படங்கள் வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் ரோஷினி, அளித்த பேட்டியில் அவரிடம், லிவிங் டுகெதர் வாழ்க்கை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், லிவிங் டுகெதர் வாழ்க்கை ஜாலி மற்றும் fun.எல்லாருக்கும் அந்த ஆசை இருக்கு, ஆனால் எல்லா வீட்டுலையும் ஓகே சொல்லமாட்டாங்க. இப்போ இருக்கிற கிட்ஸ் எல்லாம் அப்படி இருக்கிறார்கள். திருமணத்திற்கு முன்னாடி லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்தால் ஒருவரை நன்றாக புரிந்துகொள்ள முடியும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
கோடையில் குளுகுளு.. வெறும் 500 ரூபாயில் மினி ஏசி.. கரண்ட் பில் கவலையில்லை.. இதோ விவரம்..!