முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கோலாகல திருக்கல்யாணம்!… மீனாட்சி அம்மன் கோவில் திருத்தேரின் சிறப்புகளும் சுவாரஸ்யங்களும்!

05:43 AM Apr 21, 2024 IST | Kokila
Advertisement

Madurai: சித்திரை திருவிழாவில் இன்று மீனாட்சி – சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெறுகிறது. நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கானோர் மதுரையில் குவிந்தனர். நாளை மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

Advertisement

மீனாட்சியம்மன் மதுரை மாநகரின் ஆட்சிப் பொறுப்பேற்கும்விதமாக நேற்று முன்தினம் பட்டாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மீனாட்சியம்மன், சிவபெருமானை போருக்கு அழைக்கும் நிகழ்வான திக்விஜயம் நேற்று நடைபெற்றது. இதையடுத்து, சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் கோலாகலமாக நடக்கிறது.

இந்தநிலையில், மதுரை சித்திரை திருவிழாவில் இழுக்கப்படும் சிறப்பு வாய்ந்த இந்தத் தேர், கி.பி.16-ம் நூற்றாண்டில் திருமலை நாயக்கரால் சுந்தரேசுவரர் சுவாமிக்கு பெரியதாகவும், மீனாட்சி அம்மனுக்கு சிறியதாகவும் வடிவமைக்கப்பட்டது. அதுபற்றிய சில தகவல்களையும், தேரோட்டம் குறித்த சுவாரஸ்யங்களையும் இங்கே காண்போம்.

இந்த தேரில் 64 திருவிளையாடல் புராணங்கள், திருவிழா பற்றிய சிறப்புகள் மரச்சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது. இத்தேரின் அமைப்பு அண்ட பிண்டத்திற்கு சமானம். அதனால் 8 அடுக்குகளாக தேர் வடிவமைக்கப்பட்டிருக்கும். மீனாட்சி திருக்கல்யாணத்தை கோயிலுக்குள் வந்து பார்க்க முடியாத முதியவர்கள், பக்தர்கள் உள்ளிட்டோரின் குறையை போக்கும் விதமாக திருக்கல்யாணத்திற்கு அடுத்த நாள் மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் மணக்கோலத்தில் தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

இத்தேர்களில் அனைத்து தேவர்களும் எழுந்தருளுவர். அதனால் இத்தேரை காண்பது அனைத்து தெய்வங்களையும் ஒரே நேரத்தில் தரிசிப்பதற்கு சமம் என சொல்லப்படுகிறது. அதனால் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் பார்க்கப்படுகிறது.

முதலில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவானது சோழவந்தானில் நடைபெற்று வந்தது. பின் இந்நிகழ்ச்சி மதுரைக்கு திருமலை நாயக்கர் மன்னரால் மாற்றப்பட்டது. இவ்விழா சைவ மற்றும் வைணவ சமய ஒற்றுமையுடன் அக்காலத்தில் காணப்பட்ட சாதி வேறுபாடுகளை களையும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது.

Readmore: இன்று தேசிய சிவில் சர்வீஸ் தினம்!… வரலாறு, முக்கியத்துவம் என்ன?

Advertisement
Next Article