For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திக்!. திக்!. மாயன் கோவிலில் குழந்தைகள் பலியிடப்பட்ட கொடூரம்!. DNA ஆய்வில் வெளியான உண்மை!

Startling revelations: DNA analyses prove children were sacrificed in a Mayan temple. Details here
08:50 AM Jun 14, 2024 IST | Kokila
திக்   திக்   மாயன் கோவிலில் குழந்தைகள் பலியிடப்பட்ட கொடூரம்   dna ஆய்வில் வெளியான உண்மை
Advertisement

Mayan temple: பழங்கால மாயன் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட மரபணு மூலப்பொருட்களில் செய்யப்பட்ட ஆய்வில் குழந்தைகள் பலியிடப்பட்டதாக திடுக்கிடும் தகவல்களை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மெக்சிகோவில் அமைந்துள்ள சிச்சென் இட்சா வட அமெரிக்காவின் மிகச் சிறந்த தொல்பொருள் தளங்களில் ஒன்றாகும். ஸ்பெயினின் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இது ஒரு சக்திவாய்ந்த அரசியல் மையமாக இருந்தது. இறகுகள் கொண்ட பாம்புகளால் அலங்கரிக்கப்பட்ட எல் காஸ்டிலோவின் பெரிய கோயில் உட்பட அதன் நினைவுச்சின்ன கட்டிடக்கலை நகரம் என அறியப்படுகிறது.

இந்த சிச்சென் இட்சா நகரை தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்துவருகின்றனர். நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், மெக்சிகோவின் பண்டைய நகரமான சிச்சென் இட்சாவில் புதைக்கப்பட்ட 64 குழந்தைகளின் எச்சங்களை சர்வதேச விஞ்ஞானிகள் குழு அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்தனர். அந்தவகையில், இந்த கோவிலில் குழந்தைகள் பலியிடப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதவிர, குழந்தைகளிடம் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பண்டைய டிஎன் ஏ பண்டைய மாயாவின் மத சடங்குகள் மற்றும் தற்போதைய சந்ததியினருடனான உறவுகள் பற்றிய புதிய நுண்ணறிவுகளை வழங்கியதாக ஆய்வில் கண்டறியப்பட்டது. அதாவது, இந்த சடங்குகள் 500 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளின் எச்சங்கள் மற்றும் மற்றவர்களின் எச்சங்கள் 7 மற்றும் 12 ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டவை. ஆகவே 500 ஆண்டுகளுக்கு முன்மே இந்த சடங்கு யாகங்கள் நடந்தது தெளிவாகிறது. ஆனால் பெரும்பாலான குழந்தைகள் 200 ஆண்டுகளாக அங்கேயே புதைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் நெருங்கிய மரபணு உறவுகளை கொண்டிருந்தனர்: இயற்பியல் மானுடவியல் பிரிவில் ஆய்வு இணை ஆசிரியரும் ஆராய்ச்சியாளருமான Oana Del Castillo-Chávez கூறுகையில், ஆண் குழந்தைகளின் ஒரே வயது மற்றும் உணவு முறைகள், அவர்களின் நெருங்கிய மரபணு தொடர்புகளை கொண்டிருந்தனர், அவர்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் புதைக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த qபார் எவல்யூஷனரி ஆந்த்ரோபாலஜியின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜோஹன்னஸ் க்ராஸ், வெளியிடப்பட்ட முதல் பண்டைய மாயா மரமணுக்கள் இவை என்று கூறினார். தற்போதைய ஆய்வில் பாதிக்கப்பட்ட இளம் வயதினர், இப்போது சிச்சென் இட்சாவுக்கு அருகில் வசிக்கும் மக்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள், அவர்களின் மரபணுக்கள் பதினாறாம் நூற்றாண்டில் அவர்களின் முன்னோர்களின் தொற்றுநோய்களின் வெளிப்பாட்டுடன் தொடர்புடைய மாற்றங்களைக் கொண்டுள்ளன.

ஆரம்பகால தொற்றுநோய்கள்: ஐரோப்பியர்களின் வருகைக்கு முந்தைய மாயா மக்களிடமிருந்து வந்த குழந்தைகளின் மரபணுக்கள், காலனித்துவ கால தொற்றுநோய்கள் பூர்வீக மெக்சிகன்களை எவ்வாறு பாதித்தன என்பதற்கான தடயங்களையும் வழங்குகின்றன. நோய்க்கிருமிகளை அங்கீகரிப்பதில் ஈடுபட்டுள்ள மரபணுக்களின் சில பதிப்புகள் - HLA அல்லீல்கள் - நவீன மாயாவில் மிகவும் பொதுவானதாகிவிட்டன, மற்றவை அரிதாக வளர்ந்துள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இது இயற்கை தேர்வின் சான்றாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Readmore: கேன்சர் இந்த வயதினரைதான் அதிகம் பாதிக்கிறது!. வயதுக்கும் புற்றுநோய்க்கும் என்ன தொடர்பு!

Tags :
Advertisement