”ஷூட்டிங் எங்க போனாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்க சொல்றாங்க”..!! மேடையில் ஓபனாக பேசிய அம்மு அபிராமி..!!
ராட்சசன் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை அம்மு அபிராமி. மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானார். தற்போது ஹீரோயினாக உயர்ந்துள்ள அம்மு அபிராமி நடிப்பில் உருவாகியுள்ள ''ஜிகிரி தோஸ்த்து'' படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும், சமீபத்தில் வெளியான ''கண்ணகி'' படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிராமி, ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்திக்கும் சில முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசியிருக்கிறார். ”பலகோடி ரூபாய் செலவு செய்து படம் எடுக்கிறார்கள். ஆனால் படப்பிடிப்பிற்காக வெளியே செல்லும்போது சரியான பாத்ரூம் வசதி கூட இல்லாமல் அவதிப்படுகிறோம். பாத்ரூம் போகவும், உடை மாற்றவும் சிரமமாக உள்ளது. கேட்டால் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமாறு கூறுகிறார்கள்.
பாத்ரூம் விஷயத்தை எப்படி சகித்து கொள்ள முடியும் என்று எனக்கு தெரியவில்லை. முடிந்தவரை ரெடிமேட் டாய்லெட் போன்றவற்றையாவது செயல்படுத்த வேண்டும். கண்ட கண்ட இடத்தில் பாத்ரூம் போவதால், எனக்கு இன்பெக்சன் ஆகிவிட்டது. பெரிய நடிகர்கள் - நடிகைகளுக்கு மட்டும் கேரவன் வைத்து கொடுக்கிறார்கள். ஆனால், வளரும் நடிகைகள் மற்றும் துணை நடிகர்கள் இதுபோன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களும் மனிதர்கள் தானே" என பேசியுள்ளார்.