இவர்கள் ஒன்றும் சாதிக்கவில்லை!. ஐபிஎல், சிஎஸ்கே கேப்டனை கேலி செய்த பாக்.வீரர்!
Junaid Khan: ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியாவின் இளம் பேட்டர்களான அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தை பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் விமர்சித்துள்ளார்.
இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்ததற்கு சரியான பதிலடியைத் திருப்பிக் கொடுத்தது. இந்த போட்டியில் கேப்டன் கில் இரண்டாவது ஓவரில் ஆட்டம் இழந்து வெளியேறிவிட, இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த அபிஷேக் ஷர்மா மற்றும் ருதுராஜ் இருவரும் சேர்ந்து 76 பந்துகளில் 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.
இந்தப் போட்டிக்கு முதல் போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட ஆடுகளமே பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலும் முதல் போட்டியில் இரண்டு அணிகளும் 120 ரன்களை தொடவில்லை. ஆடுகளத்தில் ஆரம்ப நிலையில் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு உதவி இருந்தது. அடுத்து ஆடுகளம் இரட்டை வேகத்தில் ஸ்பாஞ்ச் பவுன்ஸ் கொண்டதாக இருந்தது.
மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருக்கும் அபிஷேக் ஷர்மா மற்றும் ருதுராஜ் இருவரையும் கேலி செய்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜுனைட் கான் பேசியிருக்கிறார். இரு வீரர்களின் இன்னிங்ஸைப் பார்க்கும்போது, ஜுனைத் கான் முதலில் பேட்டிங் செய்த வீரர்களின் சிறப்பான ஆட்டங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இருப்பினும், இந்த ஆடுகளங்கள் ஐபிஎல் ஆடுகளங்களைப் போலவே இருப்பதாகவும் , இது இந்த இரண்டு இளைஞர்களுக்கும் பொருந்தும் என்றும் அவர் கூறினார்.
"அபிஷேக் மற்றும் கெய்க்வாட் நன்றாக பேட் செய்தார்கள். ஐபிஎல் ஆடுகளங்கள் இந்திய பேட்டர்களுக்கு ஏற்றது போல் தெரிகிறது" என்று ஜுனைத் கான் எக்ஸ் (முன்பு ட்விட்டர்) இல் பதிவிட்டுள்ளார்.