முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”அசால்ட்டா வந்து ஆட்டைய போட்டு போய்டாங்களே”..!! டிடிஎஃப் வாசன் கடையில் திருட்டு..!! சிசிடிவியில் சிக்கிய 2 இளைஞர்கள்..!!

Two youths broke into DTF Vasan's motor vehicle shop and stole three castelli helmets and Rs. 30,000 in cash from the cash box.
04:36 PM Dec 12, 2024 IST | Chella
Advertisement

2கே கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். இவர், அதிவேகமாக பைக் ஓட்டி சாகசங்கள் செய்து அது தொடர்பான பைக் ஸ்டண்ட் வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டு பிரபலமானவர். இதனால் டிடிஎஃப் வாசனுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பாலோயர்களாக இருந்து வருகின்றனர்.

Advertisement

இதற்கிடையே, டிடிஎஃப் வாசன் சென்னை அயப்பாக்கத்தில் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் - ரேஸிங் உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையை சொந்தமாக நடத்தி வருகிறார். விலையுயர்ந்த ஹெல்மெட்கள், அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்களை உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வருகிறார்.

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலென்சர்களை தனது கடையில் விற்பனை செய்ததாக புகார் எழுந்த நிலையில், இதுகுறித்து பிரதமர் அலுவலகத்திற்கு சென்ற புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் போக்குவரத்து போலீசார், டிடிஎஃப் வாசனின் கடைக்கு நோட்டீஸ் கூட அனுப்பி இருந்தனர். இந்நிலையில் தான், டிடிஎஃப் வாசன் கடையில் திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது.

வீடியோவை காண : https://www.facebook.com/watch/?v=3856382271240142

இரவு நேரத்தில் டிடிஎஃப் வாசனின் மோட்டார் வாகன கடைக்குள் புகுந்த 2 இளைஞர்கள் 3 காஸ்ட்லி ஹெல்மெட் மற்றும் கல்லாப் பெட்டியில் இருந்து ரூ.30,000 ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனர். எவ்வித பயமும் இல்லாமல் கடையின் ஷட்டரை உடைத்து திருடிச் சென்றுள்ளனர். இதுதொடர்பான காட்சிகள் கடைக்குள் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

Read More : காதலரை கரம்பிடித்தார் கீர்த்தி சுரேஷ்..!! புது மாப்பிள்ளை போல் திருமணத்தில் கலந்து கொண்ட விஜய்..!!

Tags :
டிடிஎஃப் வாசன்திருட்டுஹெல்மெட்
Advertisement
Next Article