’சென்னையின் முழு உருவாக்கமே அவர்கள் தான்’..!! ’எப்படி பிரித்து பார்க்க முடியும்’..? ’இது ஒரு பாடமாக இருக்கட்டும்’..!! கஸ்தூரி வழக்கில் ட்விஸ்ட்..!!
தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த 3ஆம் தேதி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஸ்தூரியின் தெலுங்கு மக்கள் குறித்த கருத்து, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து, தெலுங்கர்கள் குறித்து பேசியதற்காக கஸ்தூரி வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை திருநகரில் நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரில் 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு கஸ்தூரி உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "தெலுங்கு மக்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். சென்னையின் முழு உருவாக்கமே அவர்கள் தான். அவர்களை எப்படி பிரித்து பார்க்க முடியும்..? நடிகை கஸ்தூரியின் பேச்சை இணையதளத்தில் நீக்க என்ன நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு கஸ்தூரி தரப்பில், "தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும், அரசியல் உள் நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன்” என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, கஸ்தூரிக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் பிறருக்கு இது ஒரு பாடமாக அமையும் என்றும் தமிழ்நாடு அரசு வாதிட்டது.
Read More : குடும்ப அட்டைதாரர்களே..!! இந்த தேதியை மறந்துறாதீங்க..!! அப்புறம் ரேஷன் பொருட்கள் கிடைக்காது..!!