முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’விஜயகாந்தின் மூளை நரம்பு வெடித்து வார்த்தைகள் சிதற இவர்கள் தான் காரணம்’..!! அதிர்ச்சி தகவல்..!!

02:07 PM Dec 28, 2023 IST | 1newsnationuser6
Advertisement

விஜயகாந்தின் உடல்நலம் எப்போது பாதிக்கப்பட்டது யாரால் பாதிக்கப்பட்டது என்பது குறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

மதுரையில் பெரிய அரிசி ஆலை அதிபரின் மகனாக பிறந்தாலும் சினிமாவில் சாதித்தே தீருவேன் என கூறிக் கொண்டு சென்னை வந்தார் விஜயகாந்த். அங்கு வாய்ப்பு தேடி அலையும் போது சில தயாரிப்பு நிறுவனங்களுக்கு உணவு இடைவேளையின் போது செல்வாராம். அப்போது விஜயகாந்திடம் எதையுமே சொல்லாமல் அங்கிருப்பவர்கள் சாப்பிட சென்றுவிடுவார்களாம். விஜயகாந்துக்கு பசி வயிற்றை கிள்ளி எடுக்குமாம். ஆனால், அவரை ஒருவருமே சாப்பிட அழைக்க மாட்டார்களாம்.

இதையடுத்து, ஹீரோ வாய்ப்பு கிடைத்த போது புரொடெக்ஷன் யூனிட்டில் சாப்பாடு வருமாம். ஆரம்ப கட்ட ஹீரோ என்பதால் அப்போதெல்லாம், ஸ்டார்களுக்கு தனி சாப்பாடு, லைட் மேன்களுக்கு தனி சாப்பாடு, மற்ற நடிகர்களுக்கு தனி சாப்பாடு என வழங்கப்படும். அப்படி ஒரு முறை அவர் ஹீரோவாக நடித்த படத்தில் அவரை விட பிரபல நடிகை ஹீரோயினாக நடித்து வந்துள்ளார். அப்போது காலை உணவு சாப்பிட அந்த ஹீரோயின் தாமதமாக வந்தாராம்.

அதுவரை அங்கிருந்தவர்களுக்கு உணவு பரிமாறப்பட வில்லையாம். விஜயகாந்துக்கு ஒரே பசியாம். பின்னர் ஹீரோயின் தாமதமாக வந்ததும் உணவு சாப்பிட ஏற்பாடுகள் நடந்தன. அப்போது விஜயகாந்த் சாப்பிட உட்கார்ந்தாராம். அங்கிருந்தவர்கள் அவரை மனிதராக கூட மதிக்காமல் எழுந்திருக்குமாறு கூறி ஹீரோயின் உள்ளிட்ட பெரிய கலைஞர்கள் சாப்பிட்டவுடன்தான் சாப்பிட வேண்டும் என தெரிவித்துள்ளனர். சாப்பிட உட்கார்ந்தவரை எழுப்பினால் எத்தனை பாவம், அந்த மனிதாபிமானம் கூட இல்லாமல் அவரை எழுப்பியுள்ளார்கள்.

இவையெல்லாம் விஜயகாந்தின் மனதில் வடுக்களாக இருந்தன. இதனால்தான் அவரது அலுவலகத்திற்கு வருவோருக்கு வயிறார உணவு வழங்கினார். அவரது அலுவலகத்தில் தினமும் குறைந்தது 50 பேருக்காவது கறி விருந்து வழங்குவாராம். விஜயகாந்தின் அலுவலகத்திற்கு வருவோர், வேறு எந்த அலுவலகத்திலாவது வாய்ப்பு கேட்டு வருவோர் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் விஜயகாந்த் ஆபிஸுக்கு போய் வயிறார சாப்பிட்டுவிட்டுதான் செல்வார்கள்.

விஜயகாந்த் மீது இதுவரை யாரும் ஒரு குறை கூட சொன்னது கிடையாது. அவர் அனைவருக்கும் பொதுவானவர். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார். அப்படிப்பட்டவர் மக்களுக்கு உதவி செய்ய தேமுதிக எனும் கட்சியை தொடங்கி முதல் தேர்தலிலேயே விஜயகாந்துக்கு வெற்றி கிடைத்தது. 2011ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார் விஜயகாந்த். அதில் 44 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் தேமுதிக வென்றது. திமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளி 2ஆவது இடத்தில் தேமுதிக வென்றது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் விஜயகாந்த் பெற்றார்.

இதையடுத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியில் மின்சார கட்டணம் உயர்ந்தது. இதை கூட்டணியில் இருந்தாலும் விஜயகாந்த் தட்டி கேட்டார். அப்போது சட்டசபையில் மக்களுக்காக ஜெயலலிதாவை விஜயகாந்த் கடுமையாக எதிர்த்தார். இதைத் தொடர்ந்து 29 எம்எல்ஏக்களில் மிகவும் நம்பிக்கைக்குரியவர்களே விஜயகாந்தை விட்டு பிரிந்து போனார்கள். இதனால் அவருடைய கட்சியின் எம்எல்ஏக்களின் பலம் குறைந்தது. பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரால் நேரடியாக அரசியலில் ஈடுபட முடியவில்லை. விஜயகாந்துக்கு அரசியலில் தொடர்ந்து தோல்வியே கிடைத்தது.

இந்நிலையில், அவரது உடல்நிலை எப்போது எதனால் பாதிக்கப்பட்டது என்பது குறித்து நடிகர் தியாகு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், விஜயகாந்தின் திருமண மண்டபத்தை இடித்தார்கள். பிறகு அவர் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்து வைத்த 29 எம்எல்ஏக்களை உடைத்து சிதற வைத்தார்கள். இதை முன்னாள் முதல்வர்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும் செய்தனர். அப்போது வேதனை அடைந்த விஜயகாந்தின் மூளை நரம்பு வெடித்து சிதறி வார்த்தைகள் போய்விட்டன என வேதனையுடன் தெரிவித்தார்.

Tags :
உடல்நலம் பாதிப்புகருணாநிதிவிஜயகாந்த்ஜெயலலிதா
Advertisement
Next Article