Cauliflower Side Effects : பல சத்துக்கள் நிறைந்த காலிஃபிளவர்..! ஆனா இவர்கள் காலிஃபிளவரை சாப்பிடவே கூடாது..!
பல சத்துக்கள் நிறைந்த காலிஃபிளவர் குளிர்காலத்தில் அதிகமாக கிடைக்கும் காய்கறிகளில் ஒன்றாகும். இதில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து என பல சத்துக்கள் நிறைந்துள்ளது. தங்கள் ரத்த சர்க்கரையை குறைக்க முயற்சிப்பவர்கள் அல்லது கார்போஹைட்ரேட் உட்கொள்ளலைக் குறைக்க முயற்சிப்பவர்கள் தங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த காலிஃபிளவரை சாப்பிடலாம்.
இதில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், புற்றுநோய் அபாயங்களைத் தடுப்பதில் பயனுள்ளதாகவும் இருக்கும். ஒரு நடுத்தர அளவிலான காலிஃபிளவரில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் நிரம்பியுள்ளது. இது எலும்புகளை வலுவாகவும், செரிமான மண்டலத்தை மேம்படுத்தவும், ரத்த அழுத்தத்தை வரம்பிற்குள் வைத்திருக்கவும் உதவுகிறது.
நார்ச்சத்து நிறைந்த காலிஃபிளவரை உணவில் சேர்த்துக் கொள்வதால், செரிமானத்தை ஆரோக்கியம் மேம்படும். மேலும் காலிஃபிளவரில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதே நேரத்தில் அதன் நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது.
சில ஆய்வுகள் காலிஃபிளவரில் உள்ள குளுக்கோசினோலேட்டுகள் புற்றுநோய்க்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிடுகின்றன. ஆனால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த காலிஃபிளவர் சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.
யாரெல்லாம் காலிஃபிளவர் சாப்பிடக்கூடாது?
பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், காலிஃபிளவர் அனைவருக்கும் ஏற்றது அல்ல. பலவீனமான செரிமானம் உள்ளவர்கள் அதை அதிக அளவில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதில் உள்ள நார்ச்சத்து சிலருக்கு வீக்கம் அல்லது வாயுவை ஏற்படுத்துகிறது. ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் போன்ற காய்கறிகளில் அதிக அளவு கரையாத நார்ச்சத்து உள்ளது, இது பச்சையாக உட்கொள்ளும் போது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும்.
செரிமானக் கோளாறுக்கான அறிகுறிகள் வீக்கம், வாயு மற்றும் தசைப்பிடிப்பு வரை ஏற்படலாம். இந்த சிக்கல்களைத் தவிர்க்க, சாப்பிடுவதற்கு முன், காய்கறிகளை நன்கு சமைக்க வேண்டும்.
தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் காலிஃபிளவரை மிதமாக உட்கொள்ள வேண்டும். ஏனெனில் அதில் கோய்ட்ரோஜன்கள் எனப்படும் கலவை உள்ளது. இது உடலில் அயோடின் உறிஞ்சுதலைத் தடுக்கிறது. தைராய்டில் விளைவுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக அதிக அளவு உட்கொள்ளும்போது இது சிக்கலை மோசமக்கலாம்.
Read More : Heart Attacks In Winter : குளிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படாமல் இருக்க… காலை எழுந்த உடன் இதை செய்தால் போதும்…