இவர்கள் எல்லாம் பிரட் சாப்பிடவே கூடாது!!!
மாறி வரும் கால சூழ்நிலையில், இன்றி அமையாத ஒரு பொருளாக மாறியுள்ளது பிரட். பலரின் காலை உணவாக இருக்கும் பிரட், எந்த சிரமமும் இன்றி நாம் எளிதாக செய்ய கூடிய ஒரு உணவு அல்லது தின்பண்டம் ஆகும். 2 துண்டுகள் சாபிட்டாலும் வயிறு நிறைந்து விடும் என்பதாலே பலர் பிரட்டை காலை உணவாகவும், மாலை நேரங்களில் ஸ்நாக்ஸ் ஆகவும் எடுத்து கொள்ள விரும்புகின்றனர். ஆனால், அனைவரும் பிரட்டை சாப்பிடலாமா? இது அனைவருக்கும் ஆரோக்கியமான உணவா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
பிரட்டின் முக்கிய மூலப்பொருள் கோதுமை. கோதுமையில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள், நமக்கு ஆற்றலை அளிப்பதோடு நமது செரிமானத்தை சீராக வைக்கும். ஆனால், வெள்ளை பிரட்டில் நார்ச்சத்து குறைவு, சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் இருக்கும். இதனால் நமது உடல் எடையை அதிகரித்து விடும். இதனால் பிரட்டை ஒரு சிலர் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. யாரெல்லாம் பிரட்டை தவிர்க்க வேண்டும் என்று பார்ப்போம்..
சர்க்கரை நோயாளிகள்: பிரட்டில் உள்ள கார்போஹைட்ரேட், ரத்த சர்க்கரையை உயர்த்தும். இதனால், சர்க்கரை நோயாளிகள் வெள்ளை பிரட்டை சுத்தமாக தவிர்த்து, முழு தானிய பிரட்டை எடுத்து கொள்ளலாம். அதுவும் குறைந்த அளவில் மட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
எடை குறைக்க முயற்சிப்பவர்கள்: ஒரு வேலை நீங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்பினால், பிரட்டை சாப்பிடவே கூடாது. ஏனென்றால், பிரட்டில் அதிக கலோரிகள் உள்ளது, இதனால் உடல் எடை அதிகரித்து விடும்.
கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள்: ஒரு சில பிரட் வகைகளில், கொழுப்பு சத்து அதிகமாக இருக்கும். எனவே, கொழுப்பு சத்து அதிகம் உள்ளவர்கள் பிரட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மலச்சிக்கல் உள்ளவர்கள்: பிரட் சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படும். இதனால், மலச்சிக்கல் உள்ளவர்கள் பிரட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
Read more: கர்ப்பிணிகளே.. ஒரே வாரத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? இதை மட்டும் சாப்பிடுங்கள்.