ராகி நல்லது தான்.. ஆனால் இவர்கள் எல்லாம் சாப்பிடவே கூடாது!!!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு என்றால் அது ராகி தான். இதனால் தான் பலர் தங்களின் குழந்தைகளுக்கு முதல் உணவாக ராகியை கொடுக்கின்றனர். பாலை விட ராகியில் தான் அதிக அளவு கால்சியம் சத்துக்கள் உள்ளது. ராகியில் வெப்பத்தன்மை இருப்பதால், குளிர்காலத்தில் ராகி சாப்பிடுவது மிகவும் சிறந்தது. மேலும், அரிசியை விட ராகியில் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதால், எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ராகி மிகவும் நல்லது. சர்க்கரை நோயாளிகளும் எந்த பயமும் இல்லாமல் ராகியை தைரியமாக சாப்பிடலாம்.
ராகியில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்த சோகை உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல மருந்தாகும். இப்படி ராகியில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது என்றாலும், ஒரு சிலர் ராகியை சாப்பிட கூடாது. ஆம், ராகியை யாரெல்லாம் சாப்பிட கூடாது என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். உங்களுக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் நீங்கள் கேழ்வரகை சாப்பிடவே கூடாது. ஆம், ராகியில் அதிகளவு கால்சியம் உள்ளதால் சிறுநீரக பிரச்சனை மேலும் மோசமடைய வாய்ப்பு உள்ளது.
அதே போன்று, தைராய்டு பிரச்சனை உள்ளவர்களும் ராகியை சாப்பிட கூடாது. இதனால் தைராய்டு பிரச்சனை இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது. இது போன்ற பிரச்சனை இல்லாதவர்களும் ராகியை அளவோடு எடுத்துக்கொள்வது தான் சிறந்தது. ஏனென்றால், அளவுக்கு அதிகமாக ராகியை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.