இந்த 5 பழக்கங்கள் இருக்கா.? உங்கள் மூளையின் செயல்திறனை பாதிக்கலாம்.!
மூளை என்பது மனித உடலில் ஒரு இன்றியமையாத உருவாகும். ஏனெனில் உடலின் அனைத்து செயல்களும் மூளையால் கட்டுப்படுத்தப்படுகிறது. மூளை சீராக இயங்கினால் மொத்த உடலும் அதன் கட்டளையின்படி சீராக செயல்படுகிறது. மூளையில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம் கூட உடலின் ஒவ்வொரு அசைவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நமக்கே தெரியாமல் நாம் செய்யும் சில செயல்கள் நமது மூளையின் இயக்கத்தை பாதிக்கின்றன. அப்படியான ஐந்து கெட்ட பழக்கங்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் .
காலை உணவை சாப்பிடாமல் தவிர்ப்பது பெரும்பாலானவர்களிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம். நாம் உறங்கி எழுந்த பின் நமது உடலுக்கு அனைத்து வகையான சத்துக்களின் தேவையும் இருக்கிறது. எனவே காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாது. இந்த உணவை தவிர்க்கும் போது அது மூளையின் செயல்பாட்டை பாதிக்கிறது. மேலும் புகைபிடிக்கும் பழக்கமும் மூளையின் செயல்பாட்டை பாதிக்கும் மற்றொரு கெட்ட பழக்கமாகும். சிகரெட்டில் இருக்கும் நிக்கோட்டின் என்னும் போதைக்கு நமது மூளை அடிமையாவதால் அதன் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் ஒரு விதமான குழப்ப நிலை தோன்றுகிறது. சிலர் ஒரே நேரத்தில் பல்வேறு விதமான வேலைகளை செய்து கொண்டிருப்பார்கள். இதுவும் மூளையை பாதிக்கும் முக்கியமான காரணி இன மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தூக்கம் மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இரவில் தாமதமாக தூங்கி எழுவது மூளையின் செயல்பாட்டை பாதிக்கும் மற்றொரு முக்கிய காரணியாகும். எல்லா உறுப்புகளுக்கும் ஓய்வு தேவைப்படுவது போல் மூளைக்கும் ஓய்வு தேவைப்படுகிறது. நாம் இரவில் அதிக நேரம் கண் விழித்திருக்கும்போது அதன் இயக்கம் பாதிக்கப்படுகிறது. நீர்ச்சத்து குறைபாடு மூளையின் இயக்கத்தை பாதிக்கும் மற்றொரு செயலாகும் . இதனால் உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலானவர்கள் பணிச்சுமை காரணமாக நீர் அருந்துவதை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.