இந்தப் பொருட்களை நீண்ட நாள் சேமித்து வைக்க கூடாது...
எப்போது விலைவாசி ஏறும் இறங்கும் என்று யாருக்கும் தெரியாது. இதனால் பலர் விலை குறைவாக இருக்கும் போதே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். இதனால் பணம் மிச்சம் ஆவது உண்மை தான். ஆனால் நாம் ஒரு பொருளை நீண்ட நாட்கள் சேமித்து வைப்பதால் அதன் மருத்துவ குணங்கள் மற்றும் சத்துகள் குறாயமால் இருக்குமா என்பது கேள்விக்குறி தான். ஆம், உண்மை தான். நாம் மொத்தமாக ஒரு பொருளை வாங்கி சேமித்து வைக்கும் போது, அதன் மருத்துவ குணம் மற்றும் சத்துகளை இழக்க நேரிடும். ஆனால் இது எல்லா பொருள்களுக்கும் பொருந்தாது. ஒரு சில பொருள்களை மட்டும் தான் நாம் இப்படி சேமித்து வைக்க கூடாது. அப்பட சேமித்து வைக்க கூடாத பொருட்களை குறிந்து தெரிந்து வைத்துக் கொள்வது அவசியமாகும்.
நாம் வாசனைக்காகவும் சுவைக்காகவும் சமையலில் சேர்க்கும் மிளகு, மஞ்சள், சீரகம், சோம்பு, மசாலா பொருட்கள் உள்ளிட்ட அனைத்திலும் சத்துகள் மற்றும் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தான் இதில் சத்துக்களும் மருத்துவ குணங்களும் இருக்கும். அதனால் இந்த பொருள்களை அதிகம் வாங்கி சேமிக்க வேண்டாம்.
நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எல்லா வகை எண்ணெய்களும் நீண்ட நாட்கள் சேமித்து வைத்தால், அது நாளடைவில் அதன் தன்மையை இழந்து விடும். இதனால் எண்ணெய்களை ஒரு மாதத்திற்கு தேவையானதை மட்டும் வாங்கி சேமித்து வையுங்கள்..
பால், வெண்ணெய், நெய், பாலாடைகட்டி, உள்ளிட்ட பொருட்கள் சீக்கிரத்தில் கெட்டுப்போய் விடும். அதனால், இந்த பொருள்களை தேவைக்கேற்ப பயன்படுத்துவது நல்லது.
தக்காளி விலை எப்போது ஏறும் இறங்கும் என்று தெரியாது. இப்படி நாளுக்கு நாள் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை உயர்ந்து வருகிறது. இரண்டு மாத காலமாக அதனால் தேவை இல்லை என்றாலும், விலை உயர்ந்து விடுமோ என்ற பயத்தில், மக்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் வாங்கி சேமித்து வைக்கின்றனர். ஆனால் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிக நாள் சேமித்து வைப்பதால் அதன் ஆரோக்கிய பலன்களை பெற முடியாது.
பொதுவாக மக்கள் பருப்பு வகைகளை அதிகம் வாங்கி சேமித்து வைப்பது உண்டு. ஆனால் பருப்பு வகைகளை மாதக் கணக்கில் சேமித்து வைக்கும் போது, சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய பலன்களை இழக்க நேரிடும்.
Read more: நீரிழிவு நோயாளிகள், சிறுதானியங்கள் சாப்பிடலாமா?? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..