Hemoglobin : ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க இந்த 10 பழங்கள் போதும்.!?
நம் உடல் ஆரோக்கியமாகவும், சீராகவும் இயங்க இரத்தம் மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. ரத்தத்தில் சிகப்பு அணுக்கள் மற்றும் வெள்ளை அணுக்கள் சரியான அளவில் இருந்தால் தான் நம் உடல் உறுப்புகள் சீராக இயங்கும். ஆனால் தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பலருக்கும் ரத்தத்தில் சிகப்பு அணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்து வருகிறது.
ரத்தத்தில் சிகப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு வகையான நோய்கள் தாக்குகின்றது. உடலில் ஹீமோகுளோபினை அதாவது இரத்த சிகப்பணுவை அதிகரிப்பதற்கு ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள், தானியங்கள், கீரைகள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். குறிப்பாக இந்த பத்து பழங்கள் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
1. ஆப்பிள் - இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சி சத்து அதிகமாக இருக்கும் ஆப்பிள் தினமும் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.
2. மாதுளை - இதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், இரும்பு சத்து, வைட்டமின் சி போன்ற சத்துக்கள் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது.
3. வாழைப்பழம் இதில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் இரும்பு சத்து போன்றவை ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்யும்.
4. ஆரஞ்ச் - வைட்டமின் சி சத்து நிறைந்துள்ள ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதால் இரும்பு சத்து அதிகரித்து ஹீமோகுளோபின் எண்ணிக்கை உயரும்.
5. கொய்யா - வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்ச்சத்து என பலவிதமான சத்துக்கள் நிறைந்த கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் இரத்தத்தை சுத்திகரிப்பதுடன் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்கிறது.
இதே போன்று ஸ்ட்ராபெரி கிவி, திராட்சை, ஆப்பிரிகாட், தர்பூசணி போன்ற பழங்களும் ரத்தத்தில் உள்ள சிவப்பணு எண்ணிக்கையை அதிகரிக்க செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.