மறந்தும் கூட, இந்த பொருள்களை பிரிட்ஜில் வைத்து விடாதீர்கள்.. இல்லனா பல பிரச்சனை வரும்..
பிரிட்ஜ் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பிரிட்ஜ் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றாக மாறியுள்ளது. அந்த வகையில், பலர் தாங்கள் நினைத்த உணவுகளை எல்லாம் பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், ஒரு சில காய்கறிகளை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த கூடாது. ஆம், ஒரு சிலர் காய்கறிகளை பிரிட்ஜில் வைப்பதால் உடலுக்கு நன்மை செய்வதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். எனவே, எந்த காய்கறிகளை எல்லாம் பிரிட்ஜில் வைக்க கூடாது என்பதை பற்றி தெரிந்து கொள்ள தொடந்து படியுங்கள்..
பூண்டு மற்றும் வெங்காயத்தை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த கூடாது. பொதுவாகவே பூண்டு மற்றும் வெங்காயத்தை நாம் அதிக அளவில் வாங்கி சேமித்து வைத்திருப்போம். ஒரு சிலர் நேரத்தை மிச்சம் செய்ய, பூண்டையும், வெங்காயத்தையும் தோல் உரித்து பிரிட்ஜில் வைத்து விடுவது உண்டு. ஆனால் அது தவறு. எனேட்ரால், பூண்டு மற்றும் வெங்காயத்தை பிரிட்ஜில் வைக்கும் போது, அவை முளைக்க ஆரம்பிக்கின்றன. இதனால் அவற்றின் சுவை கெடுவது மட்டும் இல்லாமல், அதன் ஆரோக்கிய நன்மையையும் முழுமையாக கிடைக்காது.
அதே போல், பலர் இஞ்சியை பிரிட்ஜில் வைக்க கூடாது. இஞ்சியை ஃப்ரிட்ஜில் வைப்பதால் அது விரைவில் கெட்டுப்போவது மட்டும் இல்லாமல், சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும். உருளைக்கிழங்கை பிரிட்ஜில் வைப்பதால், உருளைக்கிழங்கில் இருக்கும் ஸ்டார்ச் சர்க்கரையாக மாற்றி உடலுக்கு தீங்கு விளைவிக்கும். தக்காளியையும் பிரிட்ஜில் வைக்க கூடாது. ஆம், இது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் தக்காளியை பிரிட்ஜில் வைக்கும் போது, அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அழிக்கப்பட்டு, ஆரோக்கியத்தை பாதிக்கும்.
Read more: குட் நியூஸ்… டீ, காபி குடித்தால் இந்த புற்றுநோய் வராது!!! ஆரய்ச்சியில் வெளியான தகவல்..