For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

முட்டையை பச்சையாக குடித்தால் நோய் பாதிப்பு ஏற்படும்..! வேறு என்னென்ன உணவுகள்..!

06:20 AM Feb 10, 2024 IST | 1newsnationuser5
முட்டையை பச்சையாக குடித்தால் நோய் பாதிப்பு ஏற்படும்    வேறு என்னென்ன உணவுகள்
Advertisement

பொதுவாக காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டால் உடலில் ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கும் என்று பலரும் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஒரு சில உணவுகளை கண்டிப்பாக பச்சையாக சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அவ்வாறு சாப்பிடுவதால் உடலில் பல்வேறு வகையான நோய்கள் ஏற்படும் என்று கூறி வருகின்றனர்.

Advertisement

ஒரு சில காய்கறிகளை பச்சையாக உண்பதின் மூலமே நமக்கு ஊட்டச்சத்து அதிகமாக கிடைக்கிறது. ஆனால் ஒரு சில உணவுகளை வேக வைத்து உண்பதால் தான் ஊட்டச்சத்து கிடைக்கும். எந்தெந்த உணவுகளை கண்டிப்பாக வேகவைத்து உண்ண வேண்டும் என்பது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

1. முட்டை - புரதம் மற்றும் கால்சியத்தின் மூலப் பொருளாக முட்டை இருந்து வருகிறது. முட்டையை ஒரு சிலர் பச்சையாக குடித்து வருகின்றனர். ஆனால் இவ்வாறு பச்சையாக குடிக்கும் போது பலருக்கும் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் முட்டையை பச்சையாக கண்டிப்பாக குடிக்க கூடாது.
2. பருப்பு வகைகள் - பட்டாணி, கொண்டைக்கடலை போன்ற பருப்பு வகைகளை வேக வைத்து உண்பதன் மூலம் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுமையாக நம் உடலுக்கு கிடைக்கிறது. பச்சையாக உண்ணும் போது செரிமான பிரச்சனைகள் ஏற்படலாம்.
3. கீரை வகைகள் - கீரையில் புரதச்சத்து, நார்ச்சத்து என பல வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை வேக வைத்து சாப்பிடும்போது கீரையில் உள்ள முழுமையான சத்தும் உடலுக்கு கிடைக்கிறது.
4. உருளை கிழங்கு - உருளைக்கிழங்கில் ஒருவகையான வேதிப்பொருள் இருப்பதால் இதை வேக வைக்காமல் பச்சையாக உண்ணும்போது வாய் புண், எரிச்சல், செரிமான பிரச்சனை போன்றவற்றை ஏற்படுத்தும். வேக வைத்த உருளைக்கிழங்கை சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு வகையான ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன.
5. பழுப்பு அரிசி மற்றும் ஓட்ஸ் போன்றவற்றில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து இதய பாதுகாப்பை மேம்படுத்துகிறது.
மேலே குறிப்பிட்ட உணவுகளை பச்சையாக கண்டிப்பாக சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

Tags :
Advertisement