கவனம்!!! மறந்தும் கூட, இந்த உணவுகளை குக்கரில் சமைக்க வேண்டாம்...
தற்போது உள்ள கால கட்டத்தில், குக்கர் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உள்ளது. சாதம் தொடங்கிப் பருப்பு, சிக்கன் என எதுவாக இருந்தாலும் அதை வேகமாகச் சமைக்க பிரஷர் குக்கர் மிகப் பெரியளவில் உதவுகிறது. ஆனால் ஆரம்ப காலங்களில் சாதத்தை சீக்கிரம் சமைக்க வேண்டும் என்பதற்காக தான் குக்கர் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது கையில் கிடைக்கும் எல்லா பொருள்களையும் குக்கரில் போட்டு வேகவைத்து உணவில் உள்ள ஆரோக்கியத்தை கெடுத்து விடுகிறோம். உணவை சீக்கிரம் சமைக்க வேண்டும் என்பதற்காக நாம் எல்லா உணவுகளையும் குக்கரில் சமைக்க கூடாது. ஏனெனில் சில உணவுப் பொருட்களை குக்கரில் வேக வைக்கும் போது, அந்த உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும். அந்த வகையில் எந்த பொருள்களை எல்லாம் குக்கரில் சமைக்க கூடாது என்று பார்ப்போம்..
பால் பயன்படுத்தி சமைக்கும் உணவுகளை குக்கரில் சமைக்கக் கூடாது. இதனால் சுவையில் மாற்றம் ஏற்படுவதுடன் உணவு திரிந்து போய்விடும். உதாரணமாக, க்ரீம், சீஸ், குளிர்ச்சியான பால் பொருட்களை குக்கரில் சமைக்கவே கூடாது.
பாஸ்தா போன்ற உணவுகளை குக்கரில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனின் பாஸ்தா போன்ற உணவுகள் அளவுக்கு அதிகமான கொதிநீரில் வேக வைக்கும் பொழுது அது குலைந்து விடும். இதனால் அதன் சுவையிலும் மாற்றம் ஏற்படும்.முடிந்தவரை நீரில் தனியே வேக வைத்து, பின் அதை மசாலாவுடன் சேர்த்து கலந்து இறக்கவும்.
கீரைகள் உள்ளிட்ட மென்மையான காய்கறிகளை பிரஷர் குக்கரில் வேக வைக்க கூடாது. அதிக அழுத்தத்தில் வேக வைப்பது அதன் ஊட்டச்சத்துக்களை இழக்கக் காரணமாக இருக்கும். எனவே, கீரைகளை இதுபோல வேக வைப்பதை நாம் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
அதேபோல உணவுகளை வறுக்க பிரஷர் குக்கரை பயன்படுத்தக்கூடாது. தண்ணீருடன் சமைக்கவே பிரஷர் குக்கர் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதில் உணவுகளை வறுப்பது ஆபத்தானது.
பிரஷர் குக்கரில் கேக்குகள், பிஸ்கட்கள் என பேக்கிங் செய்ய கூடாது. பிரஷர் குக்கர் என்பது பேக்கிங் செய்வதற்காக வடிவமைக்கப்பட்டது இல்லை. யூடியூபில் சிலர் குக்கரில் கூட பேக்கிங் செய்யலாம் என்று சொல்லலாம். ஆனால் நாம் அப்படி செய்ய கூடாது.
Read more: இயந்திரத்தில் சிக்கிய, பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கை!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..